பாரதியாரின் தேசிய கீதங்கள்/23. தமிழ்மொழி வாழ்த்து
Appearance
23. தமிழ்மொழி வாழ்த்து
- தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே
- வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
- வாழிய வாழிய வே!
- வான மளந்த தனைத்தும் அளந்திடும்
- வண்மொழி வாழிய வே!
- ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
- இசைகொண்டு வாழிய வே!
- எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
- என்றென்றும் வாழிய வே!
- சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
- துலங்குக வையக மே!
- தொல்லை வினை தரு தொல்லை யகன்று
- சுடர்க தமிழ்நா டே!
- வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
- வாழ்க தமிழ்மொழி யே!
- வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
- வளர்மொழி வாழிய வே!