ஆடுதுறை மாசாத்தனார்
Appearance
ஆடுதுறை மாசாத்தனார்
[தொகு]புறநானூறு: 227
[தொகு]திணை: பொதுவியல்
[தொகு]துறை: கையறுநிலை
[தொகு]- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது.
- நனிபேதையே நயனில் கூற்றம்
- விரகின் மையின் வித்தட் டுண்டனை
- இன்னுங் காண்குவை நன்வா யாகுதல்
- ஒளிறுவாள் மறவருங் களிறு மாவுங்
- குருதியங் குரூஉப்புனற் பொருகளத் தொழிய
- நாளு மானான் கடந்தட் டென்றுநின்
- வாடுபசி யருத்திய வசைதீ ராற்றல்
- நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண்
- வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி
- இனையோற் கொண்டனை யாயின்
- இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே.