இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
123 58. கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. $71
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. 572
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். 573
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். 574
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். S75
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடாதவர். S76
கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல், S77
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. S78
ஒருத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் னோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை 579
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 580