பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு வினே ஆக்கம் பெருது வந்தமையால் இயற்கை வினைக் குறிப்பு என்றும், சாத் தன் நல்லன் ஆயினு ன் - என்னும் தொட ரில் உள்ள நல்லன் என்னும் குறிப்பு வினைமுற்று ஆயினன் என ஆக்கச்சொல் பெற்று வந்தமையால் ஆக்க வினைக்குறிப்பு என்றும் கொள்ளப்படும் என்பதை இதல்ை அறிகின்ருேம். குறிப்பும் ஆக்கமும் தொல்காப்பிய எச் சவியலில் வினேயெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகுமே ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே என்னும் நூற்பா அமைந்துள்ளது. வினேயெச் சத்திற்குரிய முடிபை விளக்கி நின்றது என்பது சேவைரையர் கருத்தாகும். தெய்வச்சிலே யார் சேவைரையரைப்பின்பற்ருமல் கூறப்பட்ட விஜன ஒன்று கூறப்படாத பிறிதொரு தெரி நிலை வினையையோ குறிப்பு விளையையோ கொண்டு முடியும் என்றும் அங்கு குறிப்பு வினே ஆக்கச் சொல்லும் உடன் பெற்றுமுடியும் என்றும் இதற்கு உரை கூறி மேற்கோள் காட்டுகின் ருர். அவர் காட்டும் மேற் கோளின் இறுதியில் ஆம் என்னும் வினேக் குறிப்பு எஞ்சி நின்றது” எனக்குறிப்பிடுகின் ருர். ஆகும் என்று தெரிநிலை வினைமுற்ருக விளங்கும் ஆக்க ச் சொல் இடைக் குறைந்து ஆம் என்று வருதல் உண்டு. பயிர் நல்ல ஆம் என வரும். ஆம் என்ற வடிவுடன் அமைகின்ற வேறு ஒரு சொல்லும் வழக்கினுள் ப பின்று வரக் காணலாம். வரு வான் ஆம், வந்தான் ஆம் எனக் கூறுங்கால் இச்சொற்களின் இறுதியில் வரும் ஆம் என்ற சொல் ஆகும் என்பதன் இடைக் குறி யாகிய ஆம் என்பதிலிருந்து வேறுபட்டதாகத் தோன் றுகிறது. இத்தகைய ஏதோ ஒரு அமைப்பில் ஆம் என்பது வினே க்குறிப் பாக தெய்வச்சிலேயார் காலத்தில் வழங்கியதா என்றும் துணி தற் கியலவில்லை. தெய்வச்சிலே யார் கருத்து மேலும் ஆழந்து சிந்தித் தற்குரியதாகும். எனினும் ஆகும் என்ற தெரிநிலை வினைச் சொல்லின் இடைக்குறைத் தோற்றமாகிய ஆம் என்பது தெய்வச் சிலையாரால் இங்குச் சுட்டப்படவில்லே என்பது தெளிவு. 398

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/405&oldid=743552" இலிருந்து மீள்விக்கப்பட்டது