முறையில், கேட்போர் உள்ளங்கொள்ள விளக்க முடிகிறது.
உலகெங்கும் விவிலியத்தைப் பரப்புவதற்கு வெவ்வேறு
மொழிகளைக் கிறித்துவர்கள் கையாண்டாலும்வினா -
விடை
முறை என்பது உலகு தழுவிய கற்பித்தல் நெறியாக
அமைந்துள்ளது.
இன்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் வினா
எழுப்புகிறார்கள். வாசகர் விடை கூறி மகிழ்கிறார்கள். ஒரு
நொடிக்குள் வினாவுக்கு விடை அறிவிக்கப்படுகிறது. விடை
தேடும் வினாக்கள் மக்கள் உள்ளத்தில் கிளர்ச்சியை
உருவாக்குகிறது என்பது உளவியல் உண்மை. வினா
தொடுக்கப்பட்டதும் தத்தம் அறிவாற்றலை அளந்தறிய
ஒவ்வொருவரும் விரும்புவர் என்பதை நாம் இன்று நாளிதழ்,
வார இதழ், வானொலி, தொலைக்காட்சி வினாடிவினா
நிகழ்ச்சிகளால் அறிகிறோம்.
எந்தப் பாடத்தையும் எளிதில் புரியவைக்கப் பல
பகுதிகளாகப் பிரித்துக் கொள்வது நல்லாசிரியரின் இயல்பு.
வெறும் பத்தி அமைப்புப் பிரிவுகளாக அமையாமல் பொருளின்
உள்ளடக்கத்தைப் புரியும் வண்ணம் ஆசிரியரே சில வினாக்கள்.
வாயிலாக விடை தரும்போது அந்தப் பொருள் பெறும் விளக்கம்
மிகுதியாகிறது. பொருள் புலப்பாட்டு நெறியில் இந்த வினா -
விடை உத்தி மிகுந்த பயன்தருவதை என் நாற்பதாண்டு
ஆசிரியப் பணி அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளேன். வினா
தொடுப்பது எளிது அன்று.தொடுத்த வினாவிற்குச் சரியான,
மிகச் சரியான விடைகளை எடுத்துக்கூறி விளக்குவது
அரியவற்றுள் அரிய கலை.
இந்த வினா - விடை உத்தியில் மணிவாசகர் பதிப்பகம்
நூல்வரிசை ஒன்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பொது
அறிவும் தேர்வில் மிகுந்த மதிப்பெண்களும் பெறுதற்குத்
துணையாக வேதியியல் அகராதி, இயற்பியல் அகராதி,
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/6
Appearance
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது