என்.வி. கலைமணி 31 அவற்றை விளக்கப் புகுந்தால், நூல் விரிவடையும், அவசியமற்றதாகிவிடும் என்பதால் நிலப் பகுதிக்குரிய சில ஆய்வாளர்கருத்துகளை மட்டுமே எடுத்துரைத்தோம்! அகில இந்தியக் காங்கிரஸ் தோன்றி ஏறக்குறைய 117 ஆண்டுகள் ஆகின்றன. அதன் தொன்மை என்ன? தோன்றியது எங்கே அந்தக் கட்சி? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? எதற்காக அது தோன்றியது? அதன், முதல் - இடை- கடை விவரங்கள் இன்றுவரை என்னென்ன என்பதை இந்த காமராஜர் வரலாற்றால் வாசகர்கள் புரிவது நலமல்லவா? அகில இந்தியக்காங்கிரஸ் மகாசபை என்ற பெயர்தான், அக்கட்சி பிறக்கும்போது திரு ஹியூம் சூட்டிய பெயர் இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை எங்கே தோன்றியது என்ற வினா, வரலாற்று ஆசிரியர்களிடையே ஒரு மர்ம சர்ச்சையாகவே இயங்கி வருகின்றது! இன்று வரை தேசியக் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதுகின்றவர்கள், காங்கிரஸ் மேடைகளிலே பேசுகின்ற சொல்லேருழவர்கள், காங்கிரசைப் பற்றிக் கனிவான நெஞ்சம் கொண்ட பத்திரிகையாளர்கள், தலைவர்களுடைய வரலாறுகளை வரைந்து காங்கிரசுக்கும் - அவர்களுக்கும் பெருமை சேர்க்க நினைக்கின்ற எழுத்தாளர்கள் அனைவரும், எடுத்த எடுப்பில் ஏதும் சிந்தியாமல், எவ்விதச் செயற்பாடுமில்லாமல், நினைத்த நினைவோடு அது பம்பாய் நகரிலே பிறந்ததாகவே ஆரூடம் கணிக்கிறார்கள்: அந்தக் கருத்தை இன்றுவரை பொதுவாக எந்த எழுத்தாளர்களும் மறுக்கவில்லை. மாறாக, திரும்பத் திரும்ப அதையே எழுதி, பேசி, வலியுறுத்துகிறார்கள்! ஆனால், இரண்டே இரண்டு அன்பர்கள்தான்.அதை மறுத்தார்கள்! நவசக்தி என்ற நாளேட்டின் ஆசிரியராகவும், தலைவர் காமராஜ் அவர்களின் பள்ளித் தோழராகவும், இளமைக் காலம் முதல் அவருடன் இணைந்து மிக நெருங்கிப் பழகியவருமான, முருக - தனுஷ் கோடி என்பவர் மறுத்துள்ளவரில் ஒருவர்! மற்றவர் சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள்! 'காமராஜ் ஒரு சரித்திரம்' என்ற நூலை முருக - தனுஷ்கோடி எழுதினார். அந்தப் புத்தகத்தில் காங்கிரஸ் கட்சியின் தோற்றம் பற்றி அவர் எழுதியிருப்பதை அப்படியே கீழே தருகின்றோம்!
பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/48
Appearance