* 4. தேசியத் தலைவர் காமராஜர் அத்தகைய காந்தீயப் பண்பாட்டிற் கேற்றவாறு எவ்விதக் குற்றமும் செய்யாமல், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடியதே குற்றமென்றால், அதற்காக வழக்கறிஞர் ஒருவர் பத்தாண்டுகள்தண்டிக்கப்பட்டார் என்றால், வெள்ளையராட்சியில் நீதிதேவதை நிர்வானமாக்கப்பட்டாள் என்றுதானே பொருள்? உண்மையை உணர்த்திட வாதாடிய வழக்குரைஞர் ஒருவர் பெற்ற பத்தாண்டு தண்டனை, உலகில் வேறு எந்த ஒரு சட்ட வித்தகனும் இதற்கு முன்பு பெற்றதில்லை! அதே நேரத்தில், மரத்தை வேரோடு பிடுங்குவதுபோல, பொய் வழக்குகளை அல்லது வழக்கின் வளைவுகளிலே, புகுந்து பதுங்கி விழி பிதுங்க வாழும் பொய்மைகளை; வேரோடு பிடுங்கி எறிகின்ற வல்லவர் என்று புகழ்பெற்றவரும் ஒரு வெள்ளையரே! அவர்பெயர் ஏர்லிநார்டன் சென்னையைச்சேர்ந்தவர் காங்கிரஸ் கூட்டங்களிலே கலந்து கொண்ட இந்திய தேசியப் பற்றுடையவர்: திரு. விஜயராகவாச்சாரியார் பத்தாண்டுகள் தண்டிக்கப்பட்ட உடனே, சேலம் நகராட்சி உயர்அதிகாரியாக இருந்த வெள்ளையர், அவருடைய நகராட்சி உறுப்பினர் பதவியைப் பறித்துக் கொண்டார்! அதனால், அவர் உறுப்பினர் பதவியையும் இழந்தார். திரு. ஏர்லி நார்டன் என்ற வழக்கறிஞரை திரு.விஜயராகவாச்சாரியார் தனதுவழக்கில் வாதாட அமர்த்தி, வெற்றியும் பெற்றார் எந்த வெள்ளை அதிகாரி அவருடைய நகர்ாட்சி உறுப்பினர் பதவியைப் பறித்தாரோ அவர் மீது விஜயராகவாச்சாரியார் மான நட்ட வழக்குத் தொடுத்து, அவரே வாதாடி- வெற்றி பெற்று அக்காலத்திலேயே நூறு ரூபாயை அவரிடம் அபராதமாக வசூலித்தார். வழக்கில் வெற்றிபெற்ற பின்பு, நகராட்சிஉறுப்பினர் பதவி திரு. விஜயராகவாச்சாரியாரை மீண்டும் நாடி வந்தது! குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியதே குற்றமென்று பத்தாண்டுகள் தண்டனை அடைந்த சம்பவமும், அந்த வழக்கில் வெற்றி பெற்றிடத் திறமையும், யார் வழக்கு போட்டாரோ அவரிடமிருந்து அபராதம் வசூலித்த வீரமும், திரு. விஜயராகவாச்சாரியாருக்கு அகில இந்தியப் புகழைப் பெற்றுத் தந்தது. அந்த வழக்கு நடைபெறும் வரை சிறையிலே அவர் அடைக்கப்பட்டார்! தமிழகத் தேசிய வீரர்களில், வெள்ளையராட்சியை எதிர்த்துச் சிறைசென்ற முதல் தேசிய வாதியும் அவர்தான்!
பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/31
Appearance