பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

A

31

ABC


A

A : ஏ : டாஸ், விண்டோஸ் மற்றும் சில இயக்க முறைமை (ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில், முதல் அல்லது முதன்மை நெகிழ் வட்டு இயக்ககப் பெயர்.

இரண்டு நெகிழ் வட்டுகள் இருப்பின் ஏ, பி (A, B) என்று அழைக்கப்படும். கணினிக்குள் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ள நிலைவட்டு எப்போதும் சி (C) என்றே அழைக்கப்படும். தொடக்க காலக் கணினிகளிள் நெகிழ்வட்டுகள் மட்டுமே இருந்தன. பிற்காலக் கணினிகளில்தான் நிலைவட்டு இடம் பெற்றது. எனவேதான் பெயர் வரிசை இவ்வாறு அமைந்தது.

கணினியை இயக்கும் போது, இயக்க முறைமை உள்ளதா என முதலில் ஏ-வட்டில்தான் தேடும். இல்லை யேல் சி-யில் தேடும். இதற்கான குறிப்பு சீமாஸ் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் இந்த வரிசையை மாற்றி அமைக்கவும் முடியும்.

ΑΑΑI : ஏஏஏஐ : அமெரிக்க செயற்கை துண்ணறிவுச் சங்கம் என்பதைக் குறிக்கும் American Association for Artificial Intelligence என்பதன் குறும்பெயர். செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான தொழில்துறை அமைப்பு.

abacus : மணிச் சட்டம் : மணிகள் வரிசையாகக் கோர்க்கப்பட்ட, கம்பிகள் பொருத்தப்பட்ட, எளிய கனக்குகளைச் செய்யப் பழங்காலத்தில் பயன் படுத்தப்பட்ட கருவி. இப்போதும் பல கீழ்த்தியை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.

abbreviated address : சுருங்கிய முகவரி முறை : முழு முகவரியைப் பயன்படுத்தும் முறையிலிருந்து மாறுபட்டது. இதில் முகவரியின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு குறுக்கப்பட்ட குறியீடு காரணமாக விரைவாக தகவல் களைக் கையாள இயலுகிறது.

abbreviated dialing : சுருங்கிய சுழற்றுகை : குறுக்குச் சுழற்றுகை.

ABC : ஏபிசி : 'Atanasoff-Berry Computer' எனப்படும் முதல் இலக்கமுறை கணினியின் குறும் பெயர். இதனை 1939இல் ஜான் அடனசோஃபும் அவரது உதவியாளர் கிளிப்போர்டு பெர்ரியும் உருவாக்கினர்.