பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: நீர்க்கடல் தன் மிகுதித் தன்மை, காற்றின் இயக்கம் இவை குறைந்து போகிறபோது, படைவீரர்களாகிய iரமக்களிடம் எழுச்சியும், தோற்றப் பொலிவும் வளர்ச்சி மிக்க வாழ்வுக்கான முயற்சியும் தொழிலும் நடைபெறாது. விளக்கம்: மழைவளம் குறையின், கடல் வளம் குறையும்; கடல் வளம் குறைய காற்றின் இயக்கம் தடைபெறும். பயனற்ற காற்றால் வாழ்கிற மக்களின், படைவீரர்களின் செய்தொழிலில் எழுச்சி, வளர்ச்சி, தோற்றப்பொலிவு எல்லாமே. தடைபடுகின்றன. மழை வளம் மட்டுமன்று, காற்று வளமும் குறைவதால், மக்களின் பழக்க வழக்கங்கள் எல்லாமே பாழ்பட்டுப் போகின்றன. வான் வளம் பற்றித் கூறிவரும் வள்ளுவர், இங்கே, அந்த அானுக்கும் வளம் தரும் கடல் வளம் பற்றிக் கூறியுள்ள பாங்கு யந்து பாராட்டிற்குரியது. 15. கெடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே எடுப்பது உம் எல்லாம் மழை + பொருள் விளக்கம்: கெடுப்பது உம் - உடல் வறுமை, உள்ள வறுமை போன்றவற்றை அழித்த கெட்டார்க்கு = இவ்வாறு வறுமை நிலையில் இருந்து விடுபடமுடியாமல் நிலையழிந்து கெட்டவர்க்கும். சார்வாய் = புகலிடமாய், பெருந்துணையாய் எடுப்பது உம் = துயரங்களைத் துரத்த உபாயத்தை மேற்கொள்ளவும், அரியதைச் செய்யவும் மற்று அங்கே - இன்னும் பல ஆக்க விளைவுகளைச் செய்துயர்ந்திட எல்லாம் மழை = மழை எல்லாமாக இருந்து உதவுகிறது. சொல் விளக்கம்: கெடுப்பது உம் - கெடுத்தல் , அழித்தல், முறியடித்தல் கெட்டார் = கேடுகளை அழிக்க முடியாமல் கெட்டவர். சார்பு = புகலிடம், துணை ஆசைப் பெருக்கம். எடுப்பது உம் - தந்திரத்தை மேற்கொள்ளல், அரியதைச் செய்ய முயலுதல்.