பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிரப்பள்ளி திருப்புகழ் உரை 331 விகாரப்படுத்தி, அலைத்து, (காம சாஸ்திர முறையில்) தட்டுதல் செய்து, காம ஆசையை எழுப்பி, காமங்கொண்டவர் தமது வசப்படும்படி ஆக்கி மயக்கித் தம்மொடு கூடுதலையே ஒழுக்கமாம்படி செய்து முதலிருந்தே இரவும் பகலும் சுற்றி யலைக்கும் வேசிகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்துப் பார்வதி பாகராம் சிவபிரான் போற்றித் துதித்த (உனது) தாமரைத் தாளைத் தொழும்படியான பாக்கியத்தைத் தந்தருளுவாயாக, எங்கும் நிறைந்தவனாய், குறைவிலாதவனாய், அறிவே அங்கமானவனாய், பரிசுத்த அன்பர்கள் பெற்று மகிழும் இன்பப் பொருளாய், புகழ் கொண்டவனாய் (அல்லது புகழப்படும்) முப்பத்தாறு தத்துவங்களின் முடிவுக்கும் வேறானவனாய். இந்திராதி கூட்டத்துத் தேவர்கள் கலந்து ஒன்று கூடிச் சிறந்த மந்த்ர ரூப பூசனை செய்து, தாமதிக்காமல் வாழ்த்திய தேவலோக காவலனே! வயலூர் அண்ணலே! திருக்கை வேல் கொண்டு துஷ்டனான சூரனைச் செயித்துத் தோலாலாய பறை சப்திக்க, பேய்கள் (அல்லது பெருங் கழுகுகள்) (அசுரப் பிணங்களைத்) தின்று கூத்தாடி நடிக்க மயில் மீது வரும் வீரனே! செம் பொன்னால் விளங்கும் அழகிய கோபுரத்தின் மீது மஞ்சு (மேகங்கள்)இரவும் பகலும் நிரம்பச் சூழ்ந்துள்ள அழகிய திரிசிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தேவநாயகனே (தேவர் பெருமாளே)!. (பத்மத் தாள் தொழ அருள்வாயே)