பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 511 அழகிய வித்தைகள் வல்லோர் (மனங்களிப்புற்று ஆ_2 தேவர்கள் (பொன் பூ) அழகிய பொன்மலர்களை (இட்டு இட்டு) சொரிந்து, சொரிந்து ஜே ஜே சேயே) குழந்தை முருகா என்று துதிக்கச், (செக்குவிட்டு) செக்கிலே போட்டு அசுரர்கள் பொடியாம்படி செலுத்தின வேலனே! யமன் (செத்திட) இறக்கவும், (அவனது) எருமைக்கடா வீழ்ந்து அழியவும், அன்று உதைகொடுத்த சுவாமியாருடைய (சிவனுடைய) இடது பாகத்தில் உள்ள அழகிய சிவகாமியார் ஈன்ற குழந்தையே! தெற்கே அரக்கர்கள் (இராவணாதியர்) இருந்த தீவு பொடிய்ர்கிப் பாழ்படச் செய்த (அச்சுதர்) திருமால் ஈன்ற (மானொடு) வள்ளியுடன் அழகிய புலியூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (வேசிய ரவரோடே.....உழல்வேனோ) 646. (நாடா) நாடி ஆய்ந்து (பிறப்பு) பிறவி என்று ஓயாது வரும் இத் தொழில் ஒரு முடிவு பெறாதோ என்று (கவலையுடன்) எண்ணி, அடியேன் கூச்சலிடும்- ஒலமிடும் இந்த மொழி - (வினையாயின்) நான் முன்செய்த வினையின் விள்ைவினால் வருவது காரணமாயிருந்தால் (வினைப்பயனால் - பிறவி எடுக்கின்றேன் என்றால்) நாதனே' (உனது சந்நிதியில் (திரு ஒலக்கச் சபையில் (ஏறாது சித்தமென) உன் திருமனதிலே (நான் அரற்று மொழி) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை நான் உணர்ந்து (நாலாவகைக்கும்) பலவாறாக - உன்னுடைய திருவருட் பெருமையையே பேசி. என்றும் அழிதல் இல்லாத உனது திருவடி மலர் என்னும் பதவியை (முத்தியைக்) கொடுத்தருள், கொடுத்தருள் என்ற குழறி, வாய் கிழிபட்டு (ஒலிட்டு அரற்றி) நிற்கும் எனக்கு (உனது) திருவருள் மிக்குக் கூடும்படி, வந்தருளுக என் மனக் கவலையைத் தீர்த்தருளுக உன்னைத் தொழுது வருதலே இல்லாத அடியேனுக்கும் எதிரிலே முன்னே எழுந்தருள வேண்டுகின்றேன்.