பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து எட்டாம் பத்துக் களின் பதிகங்களில், வேளாவிக்கோமான் பதுமன் தேவி: என்றும், ஆறாம் பதிகத்தில் வேளாவிக் கோமான் தேவி. என்றும் பயின்றுவரும் தொடர்கள் வேளாவிக்கோமான் பதுமன் என்பவனுடைய மகள் எனவே பொருள்படும் என்பது ஈண்டறியத்தக்க தொன்றாகும். சோழமன்னர் களின் மனைவியருள், பாண்டியன் மகள் தென்னவன் மாதேவி, பஞ்சவன்மாதேவி, சேரன்மகள் சேரன் மாதேவி, மாதேவி வானவன் எனவும் வழங்கப் பெற்றனர் என்பது சோழ மன்னர் கல்வெட்டுக்களால் நன்குணரப்படும். தேவி என்னும் சொல் மனைவியென்ற சிறப்புடைப் பொருளில் வழங்குவதாயினும் இடைக்காலத்தில் அச்சொல் மகள் என்ற பொருளிலும் பெருக வழங்கினமை மேற்காட்டிய பதிற்றுப்பத்துப் பதிகங்களின் தொடராலும் சோழ மன்னர் கல்வெட்டுக்களாலும் இனிது புலனாகும். (இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் - பக்கம். 143, 144).

பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் சித்தாந்த கலாநிதி ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய பதிற்றுப்பத்து - மூலமும் உரையும்" என்னும் நூலின் அறிமுகத்தில் இவ்விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அழகானதோர் விளக்கத்தினை ஆராய்ச்சி உலகிற்கு வழங்கியுள்ளார். அது வருமாறு: The Putra Kameshti Yaga is, it may be suggested, mentiomed in Poem No. 74 by Arisilkizhar, a NonBrahmin Poet. ...This reference to Putra Kameshti is very important. The question is very often raised whether the ceras who ruled over a country where the Marumakkal Tayam or matriarchal succession now reigns supreme, were 8. Prof T. P. Meenakshisundaranar, Forward to prof. Avvai Duraiswami PiIIai's commentary on Patirrupathu, Published by S. S. I. B. P. W. Ltd.,