பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 437 Լ16Ն)Լ1GՆ) விதமான அழகிய பொற்பதக்கங்களையும், ஹாரங்களையும், அடிமையாகிய நான் சொல்லுகின்ற திருப்புகழ் என்னும் தமிழ்ப் பன்னிரையும், நறுமணம் மிக்கு வீக்ம் அந்தக் கட்ப்ப்மாலையையும் அணிவோனே! தலங்களில் விஜய மங்கையிலும் கதித்த மலை என்னும் குன்றுடன் (வேறு) சில குன்றுகளிலும் பொருந்தி வீ }; வாழ்வு சிறந்துள்ள் பழ்நித் தலத்தில் அன்புற்றிருக்கும் பெருமாளே! தேவர் பெருமாளே! (மதிகேடாய் உலைவேனோ!) குறிப்பு: இப்பாடலின் முதல் ஆறு அடிகளின் ஈற்று மொழிகளைச் சேர்க்க முகமதியாலே, விழி வலையாலே, செயும் ஒயிலாலே, வெகு மதிகேடாய், நிதம் உலைவேனோ, தொழ அருள் தாராய் எனப் பொருளுடன் கூடுவது கண்டு மகிழத்தக்கது. 186 A மனக்கவலை சிறிதேனும் இல்லாமல் உனக்கு அடிமை செய்யும் பணியையே பூண்டு வகையாய் அம்ைந்துள்ள (மது நூல்) நீதி நூல் முறைகளில் தவறாமல் - நல்ல முறையில் மன விருப்பங்கள் (எண்ணிய) கணக்கின் படியே (கூடுதலுற்று) விளங்கி, ஐயந்திரிபு இல்லாமல் வேதத்திற் சொல்ல்ப்பட்ட பொருன்ள ஆய்ந்து விரும்பி, வினைக்கு ஈடான பாதகச் செயல்களைக் கடிந்து விலக்கி, முறைப்படி தியானித்து, மேலான பொருள்களைக் கொண்ட ஆகமங்களிற் சொன்ன முறையின்படி - கோபம் என்பதை விலக்கி, மகிழ்ச்சியுடன் நடந்து (கடமைகளைச் செய்து), மேம்பட்டு விளங்கும் உன்னையே (நான்) வணங்குதற்கு (வேண்டிய அருளைத்தர) (நீ) வரவேணும். (தியானிக்க) மனத்தில் வருபவனே என்று உன்னிடம் அடைக்கலப் பொருளாய் வந்து சேர்ந்து (உனது) மலர்ப் பாதங்களையே பணிந்த முநிவர்கள் ப்ொருட்டும் (பிற) சிரேஷ்டர்கள் பொருட்டும் (அல்லது வானோர் பொருட்டும்). தேவர்கள் பொருட்டும் மனம் இரங்கி யாவரையும் பயமுறுத்தி வந்த சூரனை வென்ற கூரிய வேலனே!