பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயிரவிவனம்) திருப்புகழ் உரை 13 வயிரவிவனம் 659. அருமை வாய்ந்த (கயிலை மலையை அசைத்து எடுக்க முயன்ற வீரனான ராவணன் நெரிபடும்படி (தமது) விரல்களை ஊன்றிய சிவபிரானது இடது பாகத்தில் இருக்கும் ஆயி (தாய் . பார்வதி) பெற்ற குழந்தையே! அலை வீசுங் கடலை அணையிட்டு அடைத்த பூரீராமர் மிகவும் மனமகிழ்ச்சி கொள்ளும் ஆசை (மருகனே!); அழகிய மயிலை வாகனமாகக் கொண்டு (ஆசை) (எட்டுத் திக்கிலும்) நடத்தின மருகனே! சூரியனது ಸ್ಥಿ தம்மிடத்தே விளங்கும் முகங்கள் ஆறு உடையவனே! வரிசையாயுள்ள தோளும், கரமும் பன்னிரண்டு கொண்டவனே! மிக்க பெருமை வாய்ந்த முருகனே! உனது திருவடி மலரை உள்ளத்தில் நாளும் நினைத்துத் தொழுதிருக்கும் கருத்தை உடைய அடியார்களின் தாள்களைப் பணிந்தொழுகவும் எனக்கு ஞானத்த்ைத் தந்தருளுக. வேதங்களைக் கூறும் பிரமன் சொன்ன மொழிகளுள் முதலாவதான சொல்லை (ஒம் என்பதற்குப் பொருள்ைச்) சொல்லுக என்று தந்தையார் கேட்க, (அங்ங்னமே) பொருள் ஞானகுருநாதனே! (அல்லது) உரைத்த சொல்லுக என்று (பிரமனைக்) கேட்ட ஞான குருநாதனே! தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செழிப்புடன் வாழத் தேவர்கள் சிறையிலிருந்தோர் யாவரும் (அல்லது இருந்த சிறையினின்றும் (தேவர்கள்) யாவரும்) மீளவும், விெட்டுன்டு அசுரர்கள் இறந்தொழியவும் செலுத்தின வேலாயுதனே! வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்துள்ள வயல்கள் பக்கத்தில் உள்ள நீலோற்பல மலர் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் - வளப்பம் வாய்ந்த கரைகளோடு சரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற வயிரவி வனம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (ஞானம் அருள்வாயே)