பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1063

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர வருபந்தனை நகர்வந்துறை விமலன்குரு நாதப் ப்ருமாளே. (1) 855. கழல் பெற தனதன தந்த தனதன தந்த தனதன தநத தனதான இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச இருள்பிணி துஞ்ச Ш0бПJ LDПТШஎன திடர் மங்க வுணதருள் பொங்க இசைகொடு துங்க புகழ்கூறித், திருமுக சந்த்ர முருகக டம்ப சிவசுத கந்த குகவேல. சிவசிவ என்று தெளிவுறு tநெஞ்சு திகழந டஞ்செய் கழல்தாராய், # மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு மகிழரி விண்டு மருகோனே. † வள்ளியுடன் இசைந்து - மனம் பொருந்தும் தேவி - தேவசேனை. வள்ளியின் வரலாற்றை முருகவேள் சொல்லக் கேட்ட தேவசேனை மனமிக மகிழ்ந்து என் தங்கையுடன் கூடப் பெற்றேனே என மகிழ்கின்றாள். வள்ளி.வணக்கம் செய்ய.பொருக்கென எடுத்துப் புல்லி ஈங்கொரு தமியளாகி இருந்திடுவேனுக் கின்றோர் பாங்கி வந்துற்றவாறு நன்றெனப் பரிவு கூர்ந்தாள். குறவர் பாவை...தெளவை தன்திருப் பதங்கள் தம்மைத் தாழ்தலும் எடுத்துப் புல்லி இன்றுனைத் துணையாகப் பெற்றேன். என்றாள். கந்தபுராணம் 6.24.235, 254, 1 நெஞ்சு திகழ, கழல் தாராய் - "நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்" - (சுந்தரர் 7-1-1). 'நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்" (அப்பர் 4:1-2)என-இடையறாத பத்தி நிலையைப் பெறுதற்கு வேண்டிய வரமாகும்.

  1. மருதை அழித்தது பாடல் 143-பக்கம் 332-கீழ்க்குறிப்பு கஞ்சனை மாய்த்தது-பாடல் 397-பக்கம் 502-கிழ்க்குறிப்பு.