உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

29



தீயொழுக்கமுடையவர்கள் இப்போது இன்புற்றுக் கொண் டிருக்கும்போதே, தம் இழுக்கம் வெளியில் தெரிந்து விட்டால் - அரசாங்கம் அறிந்துவிட்டால் என்ன நேருமோ என்று அஞ்சிக் கொண்டே யிருப்பார்கள். ஆதலின், இப்போதும் அவர்கட்கு மன அமைதி இராது. ஆதலானும், பின்னர் வெளிப்பட்டபோது தண்டனையும் பழியும் ஏற்பார் கள் ஆதலானும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கமுடையவர்கள், கெட்டவர்கள் பேசுகின்ற கெட்ட பேச்சுக்களை மறந்தும் - தவறியும் தம் வாயால் பேசவே மாட்டார்கள். எனவே, கெட்டதைப் பேசா திருப்பதும் நல்லொழுக்கத்திற்கு ஓர் அடையாளமாகும் என்று ஆசிரியர் குறளில் கூறியுள்ளார்.

இனிக் குறள்களைக் காண்போம்.

“அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை.
ஒழுக்கம் இலான்கண் உயர்வு”.
“ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து”.
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி”
“நன்றிக்கு வித்தாகும் கல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்”.
“ஒழுக்க முடையார்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்”.

மேலும் ஒழுக்கம் என்னும் தலைப்பில் வள்ளுவர் கூறி யுள்ள ஒரு புதிய கருத்து சிந்தனைக்குரியது:

உலகில் பலர் பழைய முறையை விடக்கூடாது என்று கூறிப் பழமையோடே முட்டிக்கொண்டு கிடப்பதைப் பார்க்கலாம். இவர்கள், கோயில்களில் பழைய வழக்கப்படி யுள்ள எண்ணெய் விளக்கைத் தவிர மின்னொளி