இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுந்தர சண்முகனார்
51
- “தொண்டர் காதனைத் தூதிடை
- விடுத்ததும் முதலை
- உண்ட பாலனை அழைத்ததும்
- எலும்பு பெண்ணுருவாக்
- கண்டதும் மறைக் கதவினைத்
- திறந்ததும் கன்னித்
- தண்தமிழ்ச் சொலோ மறுபுலச்
- சொற்களோ சாற்றீர்” (58)
- “தொண்டர் காதனைத் தூதிடை
என்று பாடித் தமது தமிழ் உணர்வுத் தின வைத் தீர்த்துக் கொண்டார். இப்படியே போனால் இந்தப் பட்டியல் மிகவும் நீளும்
சிவன் அகத்தியர்க்குத் தமிழ் தந்த செய்தி, காஞ்சிப் புராணத்தில்,
- “வடமொழியைப் பாணினுக்கு வகுத்தருளி
- அதற்கு இணையாத்
- தொடர் புடைய தென்மொழியை
- உலகமெலாம் தொழுதேத்தும்
- குடமுனிக்கு வலியுறுத்தார்
- கொல்லேற்றுப் பாகர்”
- “வடமொழியைப் பாணினுக்கு வகுத்தருளி
எனக் கூறப்பட்டுள்ளது. குடமுனியை உலகம் எல்லாம் தொழுது ஏத்துவது எதற்காக? நீண்ட தமிழை உலகம் முழுவதற்கும் தந்ததனால் என்க.
என்றும் உளது - இசை தருவது
தமிழால் அகத்தியன் புகழ் பெற்றுள்ளமையைக் கம்பர் மற்றொரு பாடலாலும் அறிவித்துள்ளார். அகத்தியனின் அடிகளை இராமன் வணங்கினானாம். அகத்தியன் மகிழ்ச்சிக் கண்ணிர் - உணர்ச்சிக் கண்ணிர் பெருக இராமனைத் தழுவிக் கொண்டு, நும்வரவு நல்வரவாகுக என்று பல நயமொழி புகன்றானாம். பாடல்: