உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மனத்தின் தோற்றம்



குண்டு கிடத்தல் புலனாகும். ஆறு கோயிலின் மேற்கு வாயிலை முட்டி மோதிக்கொண்டு செல்கிறது எனலாம். கோயிலின் கோபுரம், மதில் முதலியவற்றின் தோற்றம் தலைகீழாய்த் தண்ணீரில் தெரிவதைக் காணலாம். திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கிப் பிதுங்கியுள்ள குன்றின் படத்தையும், வடக்கு நோக்கித் திரும்பி ஓடும் ஆற்றின் படத்தையும், தண்ணீரில் கோயிலின் தோற்றம் தெரியும் படத்தையும். கெடிலக் கரை நாகரிகம் என்னும் நூலில் காணலாம். மற்றும், கோயிலின் மிக அண்மையில் வடபுறம் இருக்கும் அணை பற்றியும், அந்த இடத்தின் இயற்கைக் காட்சிச் சிறப்புப் பற்றியுங்கூட அந்த நூலில் விரிவாகக் காணலாம்.

திருவயிந்திரபுரம் கோயில் தேவநாதசாமி கோயில் எனவும் தெய்வநாயகப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படும். பெருமாள் பெயர்: தேவநாதர், தெய்வ நாயகப் பெருமாள்: தாயார் பெயர்: வைகுந்த நாயகி, செங்கமலத் தாயார். ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந் தத்தில் திருவயிந்திரபுரம் எனக் கூறப்பட்டுள்ளது. இப் பெயர் இன்று திருவந்திபுரம் எனச் சுருங்கி விட்டது. இதனையே மக்கள் தமது திருந்தாத கொச்சை வழக்கில் 'திருந்திபுரம் எனக் கூறுகின்றனர். இவ்வூர்ப் புராணங்களில் 'திருவுகீந்திரபுரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயிந்திரன்-அகீந்திரன் என்றால் ஆதிசேடன் என்று பொருளாம்; ஆதிசேடன் வழிபட்ட ஊராதலின் அயிந்திரபுரம் - அகீந்திரபுரம் என அழைக்கப்பட்டதாம். அயிந்திரபுரம் என்னும் பெயர் சுருங்கி மருவி அபிந்தை' என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது. சில கல்வெட்டு களில் திருவேந்திபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.