உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மனத்தின் தோற்றம்



சொன்னால் எப்படி இருக்கும்? துடிக்காதா மனம்? அதே நிலைதான் இப்போது வசந்தவல்லிக்கும். “சரி உன் இருப்பிடம் குற்றாலமலை என்று கூறினாய். உன் சொந்தக்காரர் இருக்கும் மலைகள் எவை எவை என்று எடுத்துச்சொல் பார்ப்போம்” என்றாள் வல்லி.

பின் குறவஞ்சி தன் சொந்தக்காரர்களின் மலைகளை யெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டாள்.

குற கேள் அம்மே சொல்கிறேன் - எனக்கு இளைய செல்லி மலை எது தெரியுமா?

“கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே”
வல்லி, அப்படியா! உன் கணவன் மலை?
குற: “கொமுகனுக்குக் காணிமலை பழகிமலைஅம்மே”
வல்வி: உன் தந்தை மலை? தமையன் மலை?
குற: எல்லுலவும் விந்தைமலை எங்தைமலை அம்மே!
இமயமலை என்னுடைய தமையன்மலைஅம்மே."
குற: எம் மாமி மலையும் தோழிமலையும் கேள்!
“சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே!
தோழிமலை நாஞ்சில்காட்டு வேள்விமலை அம்மே!”
வல்லி: ஓ அப்படியா உங்கள் கொள்வனை கொடுப் பனை எப்படி?
குற: கேளம்மே!
“ஒருகுலத்தில் பெண்கள் கொடோம் ஒரு குலத்தில் கொள்ளோம்
உறவுபிடித் தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள்”
வல்லி: அப்படியென்றால் உங்கள் மருவினருள் (சம்பந்தி களுள்) ஒருவரைக் கூறு கேட்போம்.