சுந்தர சண்முகனார்
193
கவர்ந்தன. மேலும் ஆராய்ந்து, சமசுகிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகட்கும் உள்ள ஒப்புமைகளை விளக்கி, அவை ஒரு குடும்ப மொழிகள் என்னும் உண்மையை கி.பி. 1786ஆம் ஆண்டில் வெளியிட்டு ‘மொழி ஒப்பியல்’ அல்லது ‘ஒப்பு மொழியியல்’ (Comparative Philology) என்னும் புதுத்துறைக்கு வித்திட்டார். பின்னர் இவரைத் தொடர்ந்து அறிஞர் பலர் இத்துறையில் ஈடுபட்டு ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிடலாயினர்.
‘ராஸ்மஸ் ராஸ்க்’ (Rasmus Rask) என்னும் டேனிஷ் காரர் (1787-1832) ஆரிய மொழிகள், பின்னோ - ஊக்ரிக் மொழிகள், திராவிட மொழிகள் ஆகியவற்றை அரிதின் முயன்று வகைப்படுத்தினார்.
‘பல்லஸ்’ (P.S. Pallas) என்பவர் 1791ஆம் ஆண்டிலும், ‘அதெலுங்’ (J. C. Adelung) என்பவர் 1817ஆம் ஆண்டிலுமாக, பல மொழிகளினின்றும் சொற்களைத் தொகுத்துச் சொல் அட்டவணைகள் சில படைத்தார்கள். இவ்வாறு மற்றும் சிலர் மொழி ஒப்பியல் ஆராய்ச்சியில் கருத்து செலுத்தினர்.
இத்தகைய ஆராய்ச்சிகளின் பயனாக, சமசுகிருதமும் மேற்கு ஆசிய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் 'இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் பிரிவைச் சேர்ந்தவை என்னும் உண்மை நாளடைவில் தெளிவுபட லாயிற்று. ஆனால், வட இந்திய மொழிகளேயன்றித் தென்னிந்திய மொழிகளுங்கூட, சமசுகிருதம் என்னும் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் தவறான எண்ணம் ஐரோப்பிய மொழி நூலறிஞர் பலரிடையே நெடுங்காலம் நிலவி வந்தது.
இந்நிலையில், நேப்பாளத்தில் நெடுநாள் இருந்த ஹாட்சன்[1] (Hodgson) என்னும் பெரியார், வட இந்திய -
- ↑ Linguistic Survey of India, VOL. 1