உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மனத்தின் தோற்றம்



குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம் முதலியன வாகப் பல்வேறு மொழிக் குடும்பங்கள் பேசப்படுகின்றன.

ஒரு மொழியும் அதிலிருந்து பிறந்த பல மொழிகளும், ஒரு மொழியும் அதிலிருந்து பிரிந்த பல மொழிகளும், ஒரு மொழி திரிந்து வேற்று மொழிகளின் கலப்பினால் உரு மாறிய பல மொழிகளும் ஒவ்வொரு குடும்பம் எனக் கூறப் படும். ஒரு குடும்ப மொழிகள் நாளடைவில் தமக்குள் பல் வேறு வகையான மாறுபாடுகள் பெற்றிருப்பினும், அவற்றின் அடிச்சொற்கள் பெரும்பாலும் ஒத்திருக்கும். ஒரு குடும்ப மொழிகட்குள்ளேயே, மிக மிக நெருங்கிய மொழிகளின் அடிச்சொற்கள் கட்டாயம் ஒத்திருக்கும்; நெருக்கம் குறைந்த ஒரு குடும்ப மொழிகளில் பெரும்பாலான அடிச்சொற்கள் ஒத்தில்லாவிடினும், அப்பா, அம்மா முதலிய முறைப் பெயர்களும், ஒன்று, இரண்டு முதலிய எண்ணுப் பெயர்களும் இன்ன பிறவுமாவது ஒத்திருக்கும். இப்படிப் போல உள்ள சில அல்லது பல ஒற்றுமைகளைக் கொண்டு ஒரு குடும்ப மொழிகளை அடையாளங் கண்டுகொள்ளலாம். இந்த அடிப்படையிலேயே உலக மொழிகள் மேற்கூறிய பல்வேறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொழிகள் பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மொழி ஒப்பியல் ஆராய்ச்சிகளும் விரிவும் வளர்ச்சியும் அடைந்து வருகின்றன. இந்த ஒப்பியல் மொழியாராய்ச்சி சுவைமிக்க ஒரு கலையாகவும் காட்சியளிக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சர். வில்லியம் ஜோன்சு (Sir William Jones) என்பவர் வடமொழி என்கிற சமசுகிருதம் பயின்றார். சமசுகிருத மொழிக்கும் - கிரேக்கம், இலத்தின் முதலிய ஐரோப்பிய மொழிகட்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகள் அவரது உள்ளத்தைக்