இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“......ஆரோக்கியமான, ரசமான கிராம வாழ்க்கை முறையை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார, தார்மீகச் சீரழிவைத் தடுக்க முடியும். அரசாட்சியின் ஆதார உறுப்பாகப் பஞ்சாயத்தை மீண்டும் ஏற்படுத்தினால்தான் இது சாத்தியமாகும்...... கிராமத்தின் தேவைகளை இதன் வாயிலாக வெளியிட முடியும் ; அவசியமானால் மேல் அதிகார ஸ்தாபனத்தினிடம் அவற்றைப்பஞ்சாயத்து எடுத்துக் கூற முடியும், இன்று ஊமையாகவும் பிறரால் அடக்கி ஒட்டப்படும் விலங்காகவும் இருக்கும் கிராமத்தின் வாய்க்கட்டைப் பஞ்சாயத்து அவிழ்த்து விடும்......”
-டாக்டர் அன்னிபெஸண்ட் [1917]