பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 59 அத்தமும் வாழ்வும் அகத்துமட் டே விழி யம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட் டே விம்மி விம்மி இரு கைத்தல மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே - பட்டினத்தார் - பாடற்றிரட்டு - பொது 13. 60. தன் குறை கூறல் சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியை வந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச் சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்கி லேனுண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே (அந்) புந்திக் கிலேசமும். போக்குதற்கே மயில் வாகனனைச் சிந்திக்கிலேன்..... உண்மை சாதிக்கிலேன். - (பொ - உ) (புந்திக் கிலேசமும்) மன வேதனையையும் (காயக் கிலேசமும்) உடலுக்கு உறு வேதனையையும் (போக்குதற்கு) போக்க வேண்டி (நான்) (மயில் வாகனனை) மயில்வாகனக் கடவுளாம் முருகனைச் (சிந்திக்கிலேன்) தியானிக்கின்றேன் இல்லை, நின்று பணி செய்தின்றேன் இல்லை. அவனது தண்டை குழும் சிறிய திருவடிகளை (வந்திக்கிலேன்) வணங்குகின்றேன் இல்லை, ஒரு சிறிதளவும். ஒரு துதி சொல் சொல்லியும் - (வாழ்த் ன்) துதிக்கின்றேன் இல்லை, (சந்திக்கிலேன்) அவனது சந்நிதியை அடைந்து அவனைத் தரிசிக்கிறேன் இல்லை; பொய் என்பதை இகழ்ந்து அதை விடுகின்றேன் ல்லை; உண்மையையே என்றும் ఢీష్లో கடைப் பிடித்துநிலையாகப் பேசுகின்றேன் இல்லை. (சு உ) மன வேதனையையும் உடல் வேதனையும் ஒழிக்கவேண்டி ಘೀ நான் சிந்தித்துச் சேவித்து வந்தித்து வாழ்த்தித் சிக்கின்றேன் இல்லை; பொய்யை விட்டு மெய்யையே பேசுகின்றேன் இல்லை. * (கு உ) மனம், வாக்கு காயம் இவை சுத்திபெற வேண்டி முருகனை மனத்தால் தியானித்தலும், வாக்கால் வாழ்த்துவதும், காய்த்தால் சேவித்துப் பணிவதும் வேண்டும்-என்றபடி இதனைச். "சித்தமதொன்றிச்செய்கழல் உன்னிச்,சிவனென்று த்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே" - எனத் வாகச் சம்பந்தப் பெருமான் எடுத்துரைத்துள்ளார் (1.100.8) புந்திக் கிலேசம் கவலை, மயக்க அறிவு, அச்சம்; காய்க்கிலேசம் உடல் நோய்களால் வருந்துன்பம்