பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதரநுபூதி 673 விளக்கம் 13 அர்த்தேடணை, புத்திரேடணை, லோகேடணை எனவும் கூறுவர். (களத்திரேடணை அல்லது தாரேஷணை, புத்திரேடணையுள் அடங்குமாதலால் லோகேடணை மூன்றாவதென்பர். (3) சிவ சங்கார தேசிகன் - முருகன் -திருப்புகழ் 327, பக்கம் 322, 628 பக்கம் 462 கீழ்க்குறிப்பைப் பார்க்க மூவேடனை - மூன்று ஏடணை மூவாசை 40. மனை மயக்கம் அற வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ சுனையோ டருவித் துறையோ டுபசுதுந் தினையோ டிதனோடு திரிந்தவன்ே (அந்) சுனையோடு ....திரிந்தவனே! வினையோட. மயங்கிடவோ, (பொ.உ) (சுனையோடு) சுனைகள் மாட்டும், (அருவித் துறையோடு) அருவிகளின் துறைகளின் மாட்டும், பசும் தினையோடு) பசிய தினைப்புனத்தின் மாட்டும், (இதனோடு) (புனத்தில்இருந்த) பரண் மாட்டும் (வள்ளியின்பொருட்டுச் சென்று) திரிந்தவனே! (வினை ஒட விடும்) வினையை வெருட்டி ஒட்டும் (கதிர்வேல்) ஒளி பொருந்திய வேலாயுதத்தை மறவேன் - நான் மறக்கமாட்டேன்; (அத்தகைய நான்) மனையோடு - சமுசார வாழ்வில் (தியங்கி) கலங்கி, (மயங்கிடவோ) அறிவு மயக்கம் கொள்ளலாமா! கொள்ளலாகாது என்றபடி. (சு-உ). முருகா! வேலை மறவாத நான் இல் வாழ்வில் மயங்குதல் தகுதியோ! (கு.உ.) () வேல் - வினையை ஒட்டும். வினை எறியும் வேல் திருப்புகழ் 1200 (பக்கம் 490) குறிப்பு. - (2) வள்ளியின் பொருட்டு முருகவேள் பல இடங்களில் திரிந்தது . அநுபூதி 4, திருப்புகழ் 552, அடி 6-ம் பார்க்க