பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 221 வாழ்க்கை வழியை மாற்றி விடக்கூடாது என்பதற்காக, அழுக்காறு என்கிற பொறாமையை அழிக்கும் இயல்பாகிய ஒழுக்கத்தைப் பலமுடன் கொள்ள வேண்டும் என்றார். பலமான மனத்தை எதிர்க்கவும் மாற்றவும் பலமான ஒழுக்கமே வேண்டும். அதுவே அழுக்கு நீங்காத மெய்யையும், மெய்யால் வாழும் மனத்தையும் மனத்தை வழி நடத்துகிற ஆன்மாவையும் நெறிப்படுத்தும், சரிப்படுத்தும். ஒழுக்கமே பலம். ஒழுக்கமே உபாயம். ஒழுக்கமே நல்ல ஊக்கம் என்று முதல் குறளில் பொறாமையை நீக்க சக்தி மிக்க ஒழுக்கம் வேண்டும் என்று கூறுகிறார். 162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் பொருள் விளக்கம்: யார் மாட்டும் = எல்லோரிடத்தும் (நண்பர் பகைவர் என்ற பாகுபாடு இல்லாமல்) அழுக்காற்றின் = பொறாமை கொள்கிற அன்மை பெறின் = தீமையான குணத்தைப் பெற்றிருந்தால் அஃதொப்பது = அதைப்போன்ற விழுப்பு ஏற்றின் = ஒழுக்கமின்மையானது இல்லை - எதுவுமே இல்லையாகும். சொல் விளக்கம்: விழுப்பு = அழுக்கு, நல்லொழுக்கமின்மை, உலக நடைக்கு மாறு: அன்மை = தீமை; ஏற்றின் = ஏற்றுக் கொண்டால் முற்கால உரை: ஒருவன் யாவரிடத்தும் பொறாமை இல்லாமையைப் பெறுவானாகில், அதைவிட வேறு பேறில்லை. தற்கால உரை: எவர் மீதும் பொறர்மை கொள்ளாமையை விட பெறவேண்டிய சிறப்பு வேறில்லை. புதிய உரை: எல்லோரிடத்திலுமே பொறாமை உடையவராக இருக்கும் தீமையான பண்பைக் கொண்டிருந்தால், அதை விட ஒழுக்கமின்மை (இந்த உலகில்) வேறெதுவுமே இல்லை.