பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/890

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

magnetic film storage

889

magnetic recording


magnetic film storage : காந்த நாடாச் சேமிப்பகம் : சேமிப்புக் கருவி. இதில் 35 மி. மீ. காந்த பிலிம் ஒரு சுருணையில் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுருணையை பிலிம் கையாளும் அலகில் ஏற்ற முடியும்.

magnetic head : காந்தமுனை : காந்த நாடா தகடு அல்லது உருளை போன்ற சாதனங்களில் தகவல்களை எழுதவும் படிக்கவும் உதவுகிற கருவி.

magnetic ink : காந்த மை : காந்தப் பொருள்களைக் கொண்ட மை. அந்த காந்தப்பொருள்களை காந்த உணர்விழைகள் மூலம் அறியலாம்.

magnetic ink character device : காந்த மை எழுத்துச் சாதனம்.

magnetic ink character reader : காந்த மை எழுத்து படிப்பி : காந்த மை எழுத்துகளால் அச்சிடப்பட்ட ஆவணங்களை படிக்கும் உள்ளிட்டுக் கருவி. MICR reader என்றும் கூறுவார்கள்.

Magnetic Ink Character Recognition (MICR) : காந்த மை எழுத்தறி சாதனம் (எம்ஐசிஆர்)  : எந்திரங்களால் சிறப்புக்காட்டி மையினால் அச்சிடப்பட்ட எழுத்துகளை அறிதல். வங்கிக் கடன் அட்டையிலும் பொதுப் பயன்பாட்டுத் தொழில்களிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

magnetic materials : காந்தப்பொருள்கள்.

magnetic media : காந்த ஊடகம் : செருகு அட்டைகள், நாடாக்கள் மற்றும் பிற தரவு சேமிப்புச் சாதனங்களுக்கான இடைப் பெயர். காந்தத்துண்டல் வடிவில் தரவுகள் சேமிக்கப்படுகின்றன.

magnetic memory : காந்த நினைவகம்.

magnetic printer : காந்த அச்சிடு கருவி; காந்த அச்சுப் பொறி : தொடர் அச்சிடு கருவி. இதில் புள்ளித்தளக் கருவியினால் எழுதப்பட்ட மின்சாரம் ஏற்றப்பட்ட துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

magnetic recording : காந்தப் பதிவாக்கம் : வட்டுகளிலும் நாடாக்களிலும் எண்முறை தரவுகளைப் பதிவு செய்யப்பயன்படுத்தும் தொழில் நுட்பம். பதிவு செய்யும் மேற்பரப்பை மின் சக்தியைச் செலுத்தும் படி/எழுதுமுனை வழியாகக் கொண்டு செல்வதன் மூலம் எழுதப்படுகிறது/பதியப்படுகிறது. இதன் கோட்பாடு மிகவும் எளிமையானது. வட்டு அல்லது நாடா மேற்பரப்பில்