பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பகுதி) தமிழ்ப் புலவர் சரித்திரம் 44ர் . * பங்கப் பழனத் துழுமுழவர் பலவின் கனியைப் பறித்ததென்று சங்கிட் டெறியக் குரங்கிளநீர் - தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா * கொங்கர்க் கமரா வதியளித்த கோவே ராச குலதிலகா வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே,” என்று ஒரு பாட்டு, மும்முறை பிறையெனுஞ் சொல்லை Sறுதி யடியிற் பெய்து, பாடினர்; இது கேட்டு ஒளவையார் புகழேந்திப் புலவரைப் பெரிதுங்கொண் டாடினர். அன்று முதல் ஒட்டக்கூத்தர் தருக்கடங்கி யுறுதிகூடி. யிருந்தனர் என்றுரைக்குப், காலம்:-இனிப் புகழேந்திப் புலவரிருந்த கால.பின்னதென வரைந்து சுட்டுவாம். ஒரு சாரார் இவர் கம்பர் காலத்தின ராதலின் எண்ணிய சகாத்த பெண்ணுற்றேழன்மேல்," என்ற கம்பராமாயணச் சிறப்புப்பாயிரச் செய்யுளிற் கூறி யாங்கு இவரது காலம் இற்றைக்குக் சற்றேறக்குறைய ஆயி சத்துப் பதினான்கு வருடங்களின் முன்ன ரென்பதாமென்ப, மற்றொரு சாரார் கம்பர் தங் காலம் சாலிவாகன சகாத்தம் 807-ஆம் யாண்டென்பது உண்மை வழியான் நோக்குமிடத்து நிலைநில்லாது; யாங்ஙன மெனில் ஆங்கில மொழியின்கண் அச்சிட்டுப் போ தரும் ர் இந்திய புராதன கலைஞன் என்னும் மா தாந்த பத்திரிகையினிடத்துக் கி. பி. 1063-ஆம் பாண்டியனிறுதியிற் பட் டத்திற்குப் போந்த இராசேந்திர சோழ னிரண்டாவனெ ன்ற குலோத்துங்க சோழன் முதலாவலும், கி. பி. 1127-ஆம் யாண்டு அரசுரிமை யெய்திய குலோத்துங்கசோழ னிரண்டாவது மென்ற ஈராசர் கூறப்பட்டுளர் ; அவர் தம்முட் குலோத்துங்க சோழன் முதலாவது காலமே. நமது கம்பர் தங் காலமுமேயா மென்பது பலர் க்கு மொப்ப முடிந்ததாம்; ஆகவே கம்ப ரது காலம் பதினோராம் மாற்றாண்டின் பிற்பகுதி யென்பது தானே போ தரும்; இதனைத் தென்னிந்திய சிலாசா தன வாராய்ச்சிப் பத்திரிகையின் நான் காவது சம்புடத்தில் 2015-ஆம் பக்கத்தின் கண்ணுங் காண்க வென் பாராயினார். இனிப் + பிஷப் கால்ட்வெல் அரை கூறுமாறு கம்பர் காலம் குலோத்துங்க சோழ னிரண்டாவன் காலமெனிற் படுமிழுக்கென்னை சென்று கூறுவ ரின்னொரு சாாார், இவை யாவற்றிலும் நடுவட் கூறியோருடைய கூற்றே ஏற்புடைத் தாம் எனக் கொள்க. என்னை ? "57 எண்ணிய சகாத்தம் எண்ணூற் றேழன்

  • *கொங்கைக்” என்பது உம் பாடம் + The Indian Antiquary, Pages 296-299, October 1894 + Bishop Caldwell.