பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?ዓ() - H: - “...), or , кул)', , 'і சிந்தனைக் களஞ்சியம் பொறாமை f |

  1. 11

六 பொமையின் கண்களுக்குச் சிறு பொருள்களெல்லாம் மிகப் பெரியவைகளாகவும். குள்ளர்கள் பெரிய அசுரர்களாகவும், சந் தேகங்களெல்லாம் உண்மையாகவும் தோன்றும். அ செர்வான்டிஸ் பொறாமை முழுவதையும் ஆரம்பத்திலேயே கழுத்தை நெரித்துவிட வேண்டும். இல்லையெனில், دعےl5| வலிமையடைந்து உண்மையை வென்றுவிடும். டேவனன்ட் ஆட்சி புரியும் ஒருவன், தனக்கு அடுத்தாற்போல் பட்டத்திற்குரியவனிடத்தில் எப்பொழுதும் சந்தேகமும், துவேஷமும் கொண்டிருப்பான். அ டாஸிடஸ் தன் அண்டை வீட்டுக்காரனின் நற்குணத்தைப்பற்றிக் கேள்விப்படும்பொழுது எவன் வருத்தமடைகிறானோ, அவன் அதற்கு மாறான செய்தியைக் கேட்க இன்புறுவான். தங் களுடைய பண்புகளைக் கொண்டு புகழ் பெற முடியாதவர்கள். மற்றவர்களும் தங்கள் நிலைக்குத் தாழ்த்தப்பெற்றால், மகிழ்ச்சியடைவர். பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்பொழுதும் உணர்ந் திருப்பான். - பிளினி அந்துப்பூச்சி ஆடையை அரிப்பது போல், அழுக்காறு மனிதனை அரித்துவிடும். - கிரிளேபாஸ்டம் அடுத்த வீட்டுக்காரன் வெற்றியடைவதில் பொறாமைக்காரன் உடல் மெலிவான். அ ஹொரேஸ் அழுக்காறு உடையார்க்கு அதுசாலும், ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது. க. திருவள்ளுவர்