உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலிபாபா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொள்ள வேண்டுமென்று எண்ணவில்லை. அத்தனை கழுதைகள், நகரைவிட்டு வெகுதூரம், ஆளில்லாமல் தனியாக வந்திருக்க முடியாது என்று அவர்கள் சந்தேகப் பட்டனர். அவைகளைப்பற்றி வந்த ஆசாமி எங்கே? அவன் திருடர்களின் குகைப்பக்கமாக அவைகளைக் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? இவ்வாறு அவர்கள் சிந்தித்து, உடனே எதற்கும் குகையைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

திருடர் தலைவனும் மற்றவர்களும் குகை வாயிலுக்குச் சென்றனர். தலைவன் வழக்கமாக மந்திரச் சொற்களைக் கூறியதும், பாறை விலகி விட்டது. இதற்கிடையில் குதிரைக் குளம்புகளின் ஓசைகளைக் கேட்டு காஸிம், திருடர்கள் அங்கு வந்துவிட்டதை முன்பே தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/21&oldid=512479" இலிருந்து மீள்விக்கப்பட்டது