பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆல்ை ஒரு நாள் மாலை சக்கரவர்த்தி கட்டிலில் சாய்ந்து குயிலின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அது 'விஸ்ஸ்' என்று கூவிற்று; அதனுள் இருந்த சக்கரங்களில் விர்ர் என்று சப்தம் கேட்டது. அத்துடன் இசை கின்று போயிற்று. சக்கரவர்த்தி கட்டிலிலிருந்து துள்ளியெழுந்தார்; தம்முடைய அரண்மனை வைத்தியர்களை அழைத்தனுப்பினர். ஆளுல் அவர் களால் என்ன செய்ய முடியும் ? பிறகு கடிகாரக்காரன் ஒருவன் வந்தான். நெடுநேரம் ஆராய்ந்து, அதனினும் அதிக நேரம் அதைப் பற்றிப் பேசிவிட்டு, அவன் குயிலைப் பழுது பார்த்தான். குயிலின் உறுப்புகள் ஒருவாறு மறுபடி வேலை செய்யத் தொடங்கின. ஆயி ணும் கடிகாரக்காரன், அதிக வேலையால் அதன் உறுப்புகள் தேய்ந்து விட்டன. ஆகையால் அதைக் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்':என்றும், மறுபடி அதைப் பழுது பார்ப்பதானுல் ஒரு வேளை இசை வராமலே போய்விடும் என்றும் சொல்லிப் போனன். இதல்ை செயற்கைக் குயில் ஆண்டுக்கு ஒருமுறை மட் டும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பெற்றது. அரண்மனை வித்து வான் குயில் மறுபடி சரியாகி விட்டது' என்று வெளியில் பேசிக் கொண்டார். அவர் சரி என்றதால், எல்லாம் சரிதான் என்ருகி விட்டது. ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சீன மக்களுக்கு ஒரு துக்ககரமான நிகழ்ச்சி ஏற்பட்டது. அவர்களுக்குப் பிரியமான சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டார்; பிழைப்பது அரிது என்றும் பேச்சு வந்தது. இடையிலேயே புதிய சக்கரவர்த்தி ஒருவரும் தேர்ந் தெடுத்து வைக்கப்பட்டார். ஜனங்கள் தெருக்களில் கூடி உயர் குடிப் பிறந்த அணுக்க ஊழியரிடம் சக்கரவர்த்தியின் உடல்நிலை பற்றி விசாரித்தார்கள். அவர் பியோ!' என்று கத்தி விட்டுப் போய் விட்டார். மகோன்னதமான கட்டிலில் சக்கரவர்த்தி படுத்திருந்தார். முகம் வெளுத்து விட்டது, உடல் குளிர்ந்திருந்தது. அரசவையைச் சேர்ந்தவர்கள் அவர் இறந்தே போய்விட்டார் என்று கருதி, புதிய சக்கரவர்த்தியை வணங்குவதற்காகப் போய்விட்டனர். அரண்மனை முழுதும் அறைகளிலும், நடைபாதைகளிலும் துணிகள் விரிக்கப் பட்டிருந்தன. நடப்பதில் ஒசையில்லாமல் இருப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது. எங்கும் நிசப்தமாயிருந்தது. சக்கர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/50&oldid=736196" இலிருந்து மீள்விக்கப்பட்டது