பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 61

ஆமாம் லலிதா, ஆமாம். அதுவே எங்கள் லட்சியம்; அதுவே எங்கள் பேராசிரியர்கள்கூட ஒப்புக்கொள்ளும் லட்சியம்!”

லட்சியம் எதுவாயிருந்தாலும் அது ஆண் களுக்குத்தான் இருக்கவேண்டும்; பெண்களுக்கு இருக்கக்கூடாது அப்படித்தானே?”

ஆமாம் லலிதா, ஆமாம். அப்பொழுதுதான் காதல் புத்துயிர் பெறும்; காதல் புத்துணர்ச்சி பெறும்!”
  • அதனுல் கல்யாணமாகாத தாய்மார்களும், கல்யாணமாகாத தகப்பன்மார்களும் மேல் காட்டில் பெருகுவது போலக் கீழ்காட்டிலும் பெருகவேண்டும். அப்படித்தானே?”

பெருகி என்ன பிரயோசனம்? அங்கேயும் சரி, இங்கேயும் சரி-எங்கள் மாடல் காதல்" இன்னும் அவ்வளவு தூரம் வளரவில்லை; அங்கேயும் எங்கள் மாடல் காவல்கள் இன்னும் அவ்வளவு துாரம் வெளியாகவில்லை. ஆனல் உங்களைப் போன்றவர் களுக்கு இருக்கும் தெய்வ பக்தி எங்களுக்கு உண்டு; அந்தத் தெய்வம் கல்யாணமாகாத தாய்மார்களோடு கல்யாணமான தாய்மார்களையும், கல்யாணமாகாத தகப்பன் மார்களோடு கல்யாணமான தகப்பன்மார் களையும் கட்டாயம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும் உண்டு!” அட, சோம்பேறிப் பயல்களா!’ சுைகம் சோம்பேறித்தனத்தில்தான் இருக்கிறது. அதற்கு ஆதாரம் இந்து தர்மத்தில்கூட இருக்கிறது:”