பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 73 அன்றிரவு அவர் என்னை என்ன கேட்டிருக் தாலும் பரவாயில்லை; வேறு என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை.

  • இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?’ என்று கவலையுடன் கேட்ட என்னை கோக்கி, ‘எப்படியிருக் தால் உனக்கென்ன, நீ யார் அதைக் கேட்க!” என்று அவர் சீறினர்; அவருடைய தலையை அன்புடன் கோதி விட்டுக் கொண்டிருந்த என் கையைப் பிடித்து அப்பால தள்ளினர்.

எப்படி இருக்கும் எனக்கு:- இருந்தாலும் ஒரு வாறு அதைச் சமாளித்துக்கொண்டு, என்னைத் தெரியவில்லையா, நான்தான் உங்கள் லலிதா!” ετώύτ றேன்.

  • இல்லை? நீ என் புனிதா இறந்த பின்னும் எங் கிருந்தோ வந்து என்னைக் கொல்லாமல் கொல்லும் புனிதா என்னை விட்டு அப்பால் போ!' என்று அவர் என்னை விரட்டினர்.

அப்போதுதான் அவருடைய முதல் மனைவியின் பெயர் புனிதா என்பது என்னுடைய நினைவிற்கு வந்தது, அத்துடன், அவளைகினைத்துக்கொண்டுதான் அவர் இப்படியெல்லாம் அவதிப்படுகிருர் என்பதும் தெரிந்தது. என்ன சொல்வேன், என்ன செய்வேன்? எப்படியாவது அவரைத் தேற்றவேண்டுமே என்று எண்ணியவளாய், "இறக்தவள் வரமாட்டாள். ஒரு நாளும் வரமாட்டாள். அவளை கினைத்துக் கொண்டு நீங்கள் ஏன் அமைதியை இழக்கவேண்டும்? ஒர் இ2ல உதிர்ந்தால் இன்னுேரிலை துளிர்ப்பது இயற்கை. உங்கள் வாழ்க்கைத் தருவிலிருந்து அவள் உதிர்ந்து