பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



15


நேர்ஸ்

இவர் தலைமையில் சேலன்ஜர் பயணம் 1874-இல் தொடங்கிற்று. சேலன்ஜர் என்னுங் கப்பல் அண்டார்க்டிக் வட்டத்தை முதன் முதலா கக் கடந்தது, நேர்ஸ் என்பவர் திரட்டிய அண்டார்க்டிக் கடல் பயிர் வகைகளும், எடுத்த ஒலிப்பு அளவுகளும் சர் ஜான் முரே என்பாருக்கு மிகவும் துணை செய்தன. சர் ஜான் முரே என்பார் அவற்றைக் கொண்டு, அண்டார்க்டிக் கண்டம் என்னும் ஒரு கண்டம் உள்ளது என்று முடிவு கட்டினர்.

கிறிஸ்டன்சன்

இவர் தம் குழுவினருடன் முதன் முதலில் அண்டார்க்டிக் கண்டத்தில் காலடி எடுத்து வைத்தார். தெற்கே அண்டார்க்டிக் கடலில் கப்பல் செல்லுவதற்கு இயலும் என்று இவர் அறிந்தார்.

ஷேக்கிள்டன்

இவர் 1908-1909-ஆம் ஆண்டுகளுக்கிடையே சிறந்த கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து, வீரர் பட்டம் பெற்றார். கண்டுபிடிப்புக்கள் விஞ்ஞானம், நில நூல் முதலிய துறைகள் தொடர்பானவை.