பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35 அற்புத மனிதர்



திருச்சி மாவட்டத்திலுள்ள கருவூர்ச் சிவன் கோவிலைப் புதுப்பித்தார்.

வழிப்போக்கர்களும்; புண்ணியத் தல யாத்திரீகர்களும் வழியில் உண்ண உணவும்; தங்க இடமுமாகப் பல அன்னதானச் சத்திரங்களை நிறுவினார்.

தேவாரம் பயிற்றுவிக்கும் பள்ளிகளையும், வடமொழி கற்பிக்கும் பாடசாலைகளையும் பல இடங்களில் ஏற்படுத்தினார்.

இதுபோன்ற பல பொதுத் தொண்டுகளையும், அறச் சேவைகளையும் உடனிருந்து கண்டு களித்த காரணத்தினால் அண்ணாமலைச் செட்டியாரின் மனம், அடிக்கடித் தந்தையாரை எண்ணி வாடி வருந்தியது.

தந்தையாரோடு ஒரே வீட்டில் வாழ்ந்த நாட்களை எண்ணிப் பார்க்காமல் அவரால் இருக்க முடியவில்லை.

வீட்டில் புழக்கத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் தந்தையின் கரம் பட்டவை. அவற்றைக் காணும் போதும்; தீண்டும் போதுமெல்லாம் கண் கலங்கினார்.

தொழில் நிமித்தம் எங்கு சென்றாலும் யாருடன் பேசினாலும் அவர்கள் தந்தையின் பெயரையும்; அவர் தங்களுக்குச் செய்த உதவிகளையும் பற்றி நினைவு கூறாதவர்கள் இல்லை.

இத்தகைய சம்பவங்களின் காரணமாக மனம் பாதிக்கப்பட்டு பல சமயங்களில் தன் தந்தையாரின் பெரிய திருவுருவப்படத்தைப் பார்த்தவாறே நின்றதுண்டு.

அப்போதெல்லாம்-