உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கந்தரலங்காரம். உலகுக்கு உபதேசம். தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம்-என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழுபாரும் உய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்கவை-வேல் விடும்கோன் அருள்வந்து தானேஉமக்கு வெளிப்படுமே. முருகன் நாம விசேடம். முடியாப் பிறவிக்கடல் புகார் முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப் படார் வெற்றிவேல் பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர்குலம் அடங்கப் பொடி ஆக்கிய பெருமாள் திருநாமம் புகழ்பவரே! தன்குறை கூறல் கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றம் என்குன்று எறிந்த, தாடாளனே தென்தணிகைக்குமர நின் தண்டை அம்தாள் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே. சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச் சிந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே. முருகன் துணை நிற்க: விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத்துணை முருகாஎனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத்துணை அவன் பன்னிரு தோளும் பயந்தகனி வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே. நாள் என்செயும் வினைதான் என்செயும் எனைநாடி வந்த கோள் என்செயும் கொடும்கூற்று என்செயும் குமரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 271