பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387


'பாம்பு உமிழ் மணியில்’1 தோன்றிற்று ஒர் ஆசிரியர் பெருங் கண்ணனார்க்கு. காந்தளை ஊதும் தும்பியைப் பார்த்த பாம்பு, தான் கக்கி வைத்த மணிதான் பறந்து போயிற்றோ என மருண்டதாம்.? . பாம்புக காந்தள் இதனைக் கண்டு சொன்னவர் ஒரு பாம்புப் புலவர். அவர் பெயர் நாகன்குமரனார். பாம்பறியும் பாம்பின் கால் அன்றோ? காந்தள் நிறையப் பூத்த மலையில் ஒரு களிறு படுத்திருக்க அதனை ஆதிசேடன் என்னும் பெரும் பாம்பின் மேல் திருமால் படுத்திருப்பதாகக் கண்டார் உருத்திரங்கண்ணனார்.8 இவ்வாறு எத்துணை பாம்புகள் ? ஒரு திருப்பத்தில் காந்தளைப் பார்த்த தலைவி ஒருத்தி பாம்பென்று அலறிக் கண் புதைத்தாள். கண் புதைத்தவளை மாணிக்கவாசகர், "கைமலரால் கண் புதைத்துப் பதைக்குமென் கார் மயிலே' என்று மயிலாகப் பாடினார். தலைவி மயில்; காந்தள் பாம்பு. மயில் பாம்புக்கு அஞ்சுமோ? பாம்பைப் கண்டால் மயில் கவ்வும் அன்றோ? ஆம் கம்பர் கவ்வ வைத்தார். “காந்தளின் முகைகண்ணிற் கண்டொரு களிமஞ்ஞை பாந்தளிது என உன்னிக் கவ்விய படியாராய்'3 -என்று இராமன் சீதைக்குக் காட்டினான். இப்பூ மேல்நோக்கிக் குவிந்து இதழ்கள் முழுதும் பொருந் தாமல் பக்கம் புடைத்துத் தோன்றும் காட்சி பாம்பு படம் விரித்துக் கொட்டாவி விடுவது போன்றுள்ளதாகத் திருத்தக்க தேவர் பாடினார். இவ்வாறெல்லாம் காந்தள் பாந்தளாயிற்று. குறு : 289 : 8-5 அகம் : 188 : 1.6-19 பெரும்பாண் : 872, 378 திருக்கோ : 283 3, 4. கம்ப வனம்புகு ; 9 சீவ, சி : 185.