பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (பாராயணமுறை) 233 இந்த ஐந்து நூல்களையும் பஞ்சரத்ன மதாணியாகத்திருப்புகழ் என்னும் ஒப்பிலாப் பச்சை மணி நடுவே விளங்க ஏனைய நான்கு நூல்களும் வேறு நாலு வகை மணிகளாகச் சுற்றிலும் பொருந்திய ஒரு திவ்ய மதாணி யாக-ஆண்டவன் ஏற்றுப் பூண்டனர் போலும். அருண கிரியார் பாடிக்கொண்டே யிருக்கும்பொழுது தமிழ்ப் பன்னி ராய் முருகன்மேல் வீழ்ந்த துளிகள் ஈற்றில் பஞ்ச ரத்ன மதாணியாய் அமைந்தன போலும். அடிமை சொலுஞ் சொற்றமிழ்ப் ப(ன்)னிரொடு அணிவோனே (திருப். 186) 'அருணை நகரிைெரு பக்தனிடும் ஒளி வளர் திருப்புகழ் மதாணிக் க்ருபாகரன் (வேடிச்சி காவலன் வகுப்பு) -என வருவன காண்க. XIX. பாராயண முறை புலவர் பெருமாகிைய நக்கீர தேவர். வழிகாட்டி, மெய்ஞ் ஞானியாராகிய அருணகிரிநாத சுவாமிகள் அவ்வழியைப் பின்பற்றி உலகுக்கு உபதேசித்துள்ள பாராயண முறை யானது ஆறுபடை வீடு என வழங்கும் ஆறு திருப்பதிப் பெருமாளை முறைப்படி தோத்திரஞ் செய்வதேயாம். அந் நெறியே உத்தம நெறியாம். ஆகவே, கணபதியைக் 'கைத்தல நிறைகனி' அல்லது 'உம்பர்தரு’ என்னும் திருட் புகழ்ப் பாவால் துதித்துப் பின்னர் ஆறு திருப்பதித் திருப் புகழ்ப் பாக்களைக் கூறித் துதிக்க வேண்டும். நமக்குள்ள ஒழிவு நேரத்துக்குத் தக்கபடி பெரிய பாடலோ, சிறிய பாடலோ, ஒன்ருே-பலவோ சொல்லித் துதிக்கலாம். உதா 1750от LD Г85— ஒழிவுள்ள போது ஒழிவிலாதபோது (1) திருப்பரங்குன்றம் உனைத்தினம் (5) கனகந்திரள் (2) சந்ததம் பந்தத் (10) மன்றலங் (14)