பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 ஆற்றங்கரையினிலே

ஆயினும் அந்நதியின் பெயரை நாஞ்சில் நாட்டில் உள்ள பறளியாறு நினைவூட்டுகின்றது. நாஞ்சில் நாட்டுக் காவேரி என்று நல்லறிஞர் போற்றும் அந்நதிக்குப் பல பெயர்கள் உண்டு. பழையாறு என்பது பொது மக்கள் இட்ட பெயர் கோட்டாறு என்பது கல்வெட்டிலே கண்ட பெயர், பறளியாறு என்பது பாட்டிலே பயின்ற பெயர்.

“ எத்திசையும் புகழ்படைத்த கொல்லம் தோன்றி

இருநூற்றுத் தொண்ணுற்று இரண்டாம் ஆண்டு

தத்திவிழும் பறளியாற்று அணையும் தள்ளி

தமிழ்ப்பாண்டி ராஜசிங்கம் தனையும் வென்று கொத்தலரும் பூஞ்சோலை நாஞ்சி நாடும்

கோட்டாறும் கூபர்கோன் கொண்ட நாளே” என்று பாட்டிலே குறிக்கப்பட்டுள்ள பறளியாறு என்ற பெயர் பஃறுளியாற்றுப் பெயரின் சிதைவாகத் தோன்று கின்றது.

இத்தகைய பெருமையுடைய ஆற்றின் கரையிலே பூதப்பாண்டி என்னும் ஊர் ஒன்றுண்டு. ஒரு பாண்டி மன்னன் பெயர் அவ்வூர்ப் பெயரில் அமைந்துள்ளது என்பது வெளிப்படை பழங்காலத்தில் பாண்டிநாட்டை ஆண்ட மன்னருள் பூதப்பாண்டியன் என்பான் புகழ் பெற்ற வீரனாய் விளங்கினான் என்று புறநானூறு கூறும்.

பூதன் என்ற பெயருடைய பெருமக்கள் சிலர் தமிழ் நாட்டில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. பெண்ணையாறு பாயும் நன்னாட்டில் புலவர்களை ஆதரித்த பூதன் ஒருவன் இருந்தான். அவன் அளித்த இனிய எளிய விருந்தை உண்டு பாராட்டினார் ஒளவையார்’

மதுரையில் அரசாண்ட பூதப் பாண்டியன் புவிச் செல்வமும் கவிச் செல்வமும் பெற்று விளங்கினான். அகப் பொருளும் புறப்பொருளும் அமைத்துக் கவிபாடும் திறம் அவனிடம் இனிது அமைந்திருந்தது. இளவேனிற்