உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 39 மீறமாட்டான். அம்சுவானால் திமிறுவான். அவளுக்கும் ஆத்திரம். பின்புறத்து அறையில் தள்ளிக் கதவைச் சாத்துகிறாள். பாட்டி, கோழிக்குஞ்சு ஒன்றைக் காணாமல் தேடிவிட்டு வருகிறாள். "அல்லாம் வூட்டத் தொறந்து போட்டு, இவனையும் உக்கார வச்சிட்டு எங்க போயிட்டீங்க?' "ஏங்கண்ணு? இன்ஜினிருக்குச் சேந்தாச்சா..." பாட்டி அருமையாக அவள் கூந்தலைத் தடவிக் கொண்டு விசாரிக்கிறாள். "ஆமா இந்தத் தரித்திரம் புடிச்ச குடில பெறந்திட்டு கனாக் கண்டா மட்டும் பத்துமா?” என்று சீறி விழுகிறாள். "கோவப்படுற. நீ நல்லா இருக்கணும். பொறந்த குடில உசத்தனும்னுதான் ஆச.” 'ஆசப்படுங்க, அங்க சீட்டுமில்ல ஒண்னு மில்ல. ரெண்டாயிர ரூபா கட்டணுமாம்." மூலையில் சோர்ந்துபோய் உட்காருகிறாள் காந்தி. பாட்டியும் திகைத்துப் போய்த்தான் நிற்கிறாள். "ஏ, காந்தி இந்தா, பணத்தைப் பத்திரமாக் கொண்டு வையி..." சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுக்கிறார். "எங்க லட்சுமி, அம்சு எல்லாம்? நடவுக்குப் போயிருக்காளுவளா?” "ஆமா, குப்பம் பயலும் இல்ல, வடிவு வந்தா, நேத்துப் புடுங்கின நாத்த மட்டும் நட்டுடலான்னு உம் புள்ள போயி தவராறு பண்ணிருக்கா...” 'கோபுவா?” "ஆமா, என்னாத்துக்கு ஏழு-ஒம்பது குடுக்கிறது? அஞ்சு ரூபா ஆணுக்கு, பொம்பிளக்கி மூணுன்னா, அப்பாரு வெதக் கோட்டயில எலி மாருதி இன்னா தம்பி, நீயே பேசுறன்னா, இவ அடிக்கப் போயிட்டா. நேத்து நீங்கல்லாம் பண்ண மிராசுன்னு அவனவங்கால நக்கிட்டுக் கிடந்தப்ப, ஆருரா குண்டடிப்பட்டு இந்த நெலமக்கிக் கொண்டு வந்தது? ஏழு-ஒன்பது வெளில பேசு, இங்க அந்த ரூல் செல்லுபடியாவாது? என்றான் போல.” "அப்படியப்படியே கரையேறிட்டாங்க போல. இவ ஒரு மூணு மணியிருக்கும், கிளம்பிப்போனா..."