உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

வேறு

உணர்வுகள் உள்ளம் தன்னில் ஊற்றெடுத் தெழுந்து பாயக் கனவுகள் எழுந்து மோதிக்

கலக்கிட நெஞ்சம் தன்னை நனவிலும் உறக்கம் கெட்டே

நடுங்கிடும் இராக்கா லத்தும் அனமெனும் குமரி காதல்

அரும்பிட மயக்கங் கொள்வாள்!

கண்டதும் ஊழ்தான் கூட்டக்

கரைந்திட்ட நெஞ்சம் தன்னில்

பெண்டினைக் குடிதான் வைத்துப்

பிறவெலாம் நினையா தெய்த்து

மண்டிடும் காதல் நோயால்

மயங்கியே மறந்தே என்றும்

வண்டென வீழ்ந்தே கன்னி

வலையினில் துடிப்பான் காளை!

தினந்தினம் இவர்தான் கொள்ளும் சிந்தனை பேச்சின் போக்கும் மனந்தனில் வாங்கிச் சான்றோர் மாத்தமிழ்த் தேனைக் கூட்டி

இனந்தரும் இயற்கைத் தூண்டல்

இவையென வகுத்துக் காட்ட

மனந்தனிற் கருணை கொண்டார்

மலர்ந்தன அகநூல் எல்லாம்!

5

!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/10&oldid=1636793" இலிருந்து மீள்விக்கப்பட்டது