உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

வேறு

வகுத்தபல வாழ்க்கையதன் பகுதி எல்லாம் வண்தமிழின் ஓவியமாய் இனிமை துள்ளத் தொகுத்துபல இலக்கியமாய்த் தொன்மைக் காலத்

தொல்தமிழர் வாழ்வியலாய் வழங்கும் என்றே தொகுத்தவற்றை முறைப்படுத்தித் தொகையும் காட்டித் தொல்லோர்கள் அகநூல்கள் என்றே பண்டு

பகுத்தவற்றுள் நல்லனவாம் ஒழுக்கம் காட்டும்

பாவளத்தில் நற்றிணைக்கோர் ஈடே இல்லை!

7

நற்றிணையின் நயமெல்லாம் நாளும் ஆய்ந்தே

நல்லவுரை வகுத்திட்டார் நலங்கள் காட்டிக் கற்றறிந்த புலமையுடன் தமிழின் ஆர்வம்

கனிந்தவுளப் பின்னத்தூர்ப் புலவர் செம்மல் நற்றிறத்து நாராயண சாமி அய்யர்

நவின்றவுரைத் துணையின்றேல் நமக்கே நல்ல நற்றிணையின் செழுமையொடு தமிழின் சீர்த்தி

நலம்நுகர மார்க்கமில்லை உண்மை தானே!

அவர்பின்னர் ஒளவையெனும் ஆழ்ந்த ஞான

8

அறவோரும் பேருரையால் அழகு செய்தார்

இவர்செய்த உரைநலத்தால் இன்பம் கண்டார் இயற்றமிழில் வல்லவர்கள்; எவரும் கற்றே நலம்காணத் தெளிவுரையில் தமைத்தேன்; நல்ல நற்றமிழப் பாரியவர் பதிப்பிக் கின்றார்; வளம் நிறைக தமிழுலகம் தமிழ்ப்பற் றோங்கி வான்முட்டத் தமிழ்முழக்கம் எழுக யாண்டும்!

9

புலியூர்க் கேசிகன்

7-9-1980

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/11&oldid=1636794" இலிருந்து மீள்விக்கப்பட்டது