உள்ளடக்கத்துக்குச் செல்

அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சதுர யுகம்

விக்கிமூலம் இலிருந்து
சதிரயுகமெனவே தான்வகுத்தாரோர்பீடத்தை
அவ்வுகத்திலேயுதிரம் அசுரர்குலமாகி
முவுகத்துப்பாவி முடிந்தவொரு துண்டமதை
குண்டோமசாலி எனவேகொடியவனாய்
பண்டோர்குறோணி பாதக ஆறுதுண்டமதில்
வந்துபிறந்தான் சதிரயுகத்திலம்மானை
முந்துபிறந்த முழுமோசமானதிலே
மந்துமுகமாய் மாபாவிதன்னுயிரை
நானூறாயிரமுழங்கள் நாடுமவன்கரங்கள்
முன்னூறு கால்கை வேள்கள்துதிபோலே
உடைதோளுடம்பு உருவமறியாமாபாவி
படைத்தோனையறியான் பாரியென்றுந்தானறியான்
அட்டைபோலேசுருண்டு அம்மிபோலேகிடப்பான்
மட்டைபோலேதிரிவான் வயிறுமிகப்பசித்தால்
அன்னுகத்திலுள்ள அசுரகுலங்களையும்
தன்வயிறுக்கிட்டு தடிபோலுருண்டிடுவான்
இப்படியே நாளுமிவன் குலங்களானதெல்லாம்
அப்படியேதின்றவன் பசிகளாற்றாமல்
அய்யையோவென்றலறினான் காணம்மானை
மெய்யையனான விறுமாவதுகேட்டு