உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை ஒடி விளையாடு பாப்பா - நீ ஒய்ந்தி ருக்க லாகாது பாப்பா என்ற மகாகவி பாரதியாரின் பாடலையும், தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பக - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி என்ற கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்களின் பாடலையும் நான் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது பாடிப்பாடிப் பரவசமடைந்தேன். சற்றுப் பெரியவனானதும் மற்றக் குழந்தைகள் அப்பாடல்களை ஆர்வமுடன் டாடுவதைக் கேட்டுக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். அக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் படிப்பதிலும், குழந்தைகள் அவற்றைப் பாடக் கேட்பதிலும் இன்பம் பெற்றுவந்த எனக்கு, சொந்தமாகச் சில பாடல்கள் எழுதவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அந்த ஆவலில் ஒரு சில பாடல்களை எழுதினேன். அவற்றை என் நண்பர்களிடம் காட்டினேன். அவர்கள் என் முயற்சியைப் பாராட்டினர். அவர்களின் பாராட்டுரைகள் எனக்கு ஊக்கமளித்தன; உற்சாக மூட்டின. அந்த ஊக்கத்தில், உற்சாகத்தில் நான் தொடர்ந்து குழந்தைப் பாடல்கள் பலவற்றை எழுதினேன். எளிய நடையில், இனிய சந்தத்தில் கவிமணியவர்கள் இயற்றிய பல பாடல்களையும் பார்த்துப் பார்த்துப் படித்துப் படித்து அவர்கள் வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையுடனே எழுதிவந்தேன். முதல் முதலாக - அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு மலரும் உள்ளம் என்ற இதே பெயரில் நான் எழுதிய இருபத்து மூன்று பாடல்கள் கொண்ட ஒரு புத்தம் வெளிவந்தது. அதற்குப் பள்ளி ஆசிரியர்களும், பத்திரிகாசிரியர்களும், பெற்றோர்களும் அளித்த வரவேற்பும் ஆதரவும் என் முயற்சிக்குத் துண்டுகோலாயின. - மேன்மேலும் தொடர்ந்து எழுதினேன். குழந்தைகளுக்காக வெளிவந்த-வெளிவருகின்ற பல பத்திரிகைகளிலும் அவை இடம் பெற்றன. அப்பாடல்களை அவ்வப்போது சிறு சிறு புத்தகங்களாகப் புதுக்கோட்டைத் தமிழ் நிலையத்தாரும், ஒ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/11&oldid=859421" இலிருந்து மீள்விக்கப்பட்டது