பாரதியாரின் தேசிய கீதங்கள்/49. வ.உ.சி.க்கு வாழ்த்து
Appearance
49. வ.உ.சி.க்கு வாழ்த்து
- வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
- மன்னனென மீண்டான் என்றே
- கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
- வருந்தலைஎன் கேண்மைக்கோவே!
- தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்
- நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
- வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
- வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!