உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறநாட்டார் ஆட்சிக் காலம்

147


மைசூர் மன்னர்கள் ஆட்சிக்குத் தமிழகம் உட்பட்டிருந்த காலத்தில், கன்னட மக்கள் பலர் தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறினர். கொங்கு நாட்டுக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன; பல புதிய கோவில்களும் கட்டப்பட்டன. குளங்கள் பல வெட்டப்பட்டன. கோயம்புத்தூரிலுள்ள சிக்கதேவராயன் குளம் சிக்கதேவனால் வெட்டப்பட்டதாகும். சத்திய மங்கலத்தில் உள்ள குமாரசாமிக் கோவிலைக் கட்டியவனும் இவனே. நிலங்கள் அளக்கப்பட்டன. புகையிலை வரி, ஆட்டு வரி, புல் வரி முதலிய வரிகள் விதிக்கப்பட்டன. ஐதர், திப்பு இவர்கள் காலத்தில் இன்னும் பல வரிகள் வாங்கப்பட்டதால் உழவும், வணிகமும் வளம் குன்றத் தொடங்கின. மக்கள் பெரிதும் அல்லலுற்றனர். பொருளாதார நிலை குன்றத் தொடங்கியது. இக்காலத்தில்தான் முகமதிய சமயமும், கிறித்தவ சமயமும் தமிழ்நாட்டில் வளரத் தொடங்கின. திப்புவின் காலத்தில் பல இந்துக்கள் முகமதியராயினர். அபேடுபுஆ (Abbe Dubos) என்ற பாதிரியார் தமிழ்நாட்டிற்கு வந்து கிறித்தவ சமயத்தை மக்களிடையே பரப்பினார். இதற்குப் பின்னர் பல பாதிரிமார்கள் தமிழகம் வந்தனர்; சுவார்டச் (Schwartz), சீகன்பால்க் (Ziegenbalg) போன்ற சமயப் போதகர்களும் வந்தனர்.

திப்புவின் காலத்தில் ஆட்சி முறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. நாடு, 1000 சிற்றூர்களைக் கொண்ட பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மாவட்டங்கள் 40 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அசாவ் (Asaf), பாச்தார் (Faujdar) என்பவர்கள் மாகாணத் தலைமை அதிகாரிகள்; அமில்தார் (Amildar), தரப்தார் (Tarafdar) என்பவர்கள் மாவட்ட அதிகாரிகளாவர். இவர்களுக்கு உதவியாகச் செரிச்த்ததார் (Sheristadar) என்ற அதிகாரியும் இருந்தார். கிராம ஆட்சி கிராமப் பஞ்சாயத்தினரால் திறம்பட நடத்தப்பட்டது. சிக்கதேவன் காலத்தில் தொடங்