வினாத்தாள் விடவில்லை
17
போகாதிருக்க வேண்டுமே," என்ற கவலையோடு இருக்கும் எனக்கு இது சிறிது எரிச்சலை ஊட்டிற்று. ஆயினும், அதைப் பூர்த்தி செய்து தரும்படி நல்ல ஆங்கில உச்சரிப்போடு இனிமையாக வேண்டியதைத் தட்ட முடியவில்லை. வினாத்தாளைப் பார்த்தேன். பெயர் குறிப்பிடக் கேட்கவில்லை. " எங்கள் ஊரில் தங்குவீர்களா? தங்காவிட்டால் காரணம் என்ன? காலமின் மையா? இங்குள்ள வசதிக்குறைவா? இங்கு உங்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை?" இப்படிப்பட்ட கேள்விகள் இருந்தன. நாங்கள் மூவரும்-தமிழர்கள் பதில் எழுதிக்கொடுத்தோம். இரான் நாட்டிற்குப் பயணிகள் வருவதைப் பெருக்குவதற்காக இந்த ஆய்வு என்று குறித்திருந்தார்கள். பெண்கள் இத்தகைய வேலை மட்டுமா செய்கிறார்கள்? துப்புரவுப் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் பெண்கள் செய்யக் கண்டோம். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாவதற்கான இவ்வறிகுறிகள் நம்பிக்கை ஊட்டுவன.
டெஹ்ரானை விட்டுப் புறப்பட்டோம் அங்கு ஆஸ்திரேலியக் குடும்பம் ஒன்று விமானத்தில் ஏறியது. கணவன், மனைவி, நான்கு வயதுப் பையன் ஒரு வயதுக் குழந்தை ஆக நால்வர். பையன் துருதுரு வென்று இருந்தான். என் பக்கத்தில் இருந்த சாளரத்தின் வழியே பார்ப்பதற்காக அருகில் வந்து நின்றன். புதியவனாகிய என்னை எப்படித் தாண்டிப் போவது என்று தயங்கினான். "மாமாவிற்கு 'ஹலோ' சொல்லி விட்டு அனுமதிகேள்" என்று தந்தை ஊக்குவித்தார். "ஹலோ மாமா, சாளரம் வழியே பார்க்கலாமா?" என்று கேட்டான், நான் அனுமதித்தேன். வேடிக்கை பார்த்து அவன் மகிழ்ந்தான்; எனக்குக் காட்டிக்காட்டிப் பூரித்தான். இன்பத்தைத் தனியே துய்க்க முடியுமா!