பயனர்:Surya Prakash.S.A./நன்னூல் (மூலம்)
Appearance
சிறப்புப் பாயிரம்
[தொகு]- மலர்தலை உலகின் மல்கிருள் அகல
- இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
- பரிதியி நொருதா னாகி முதலீறு
- ஒப்பளவு ஆசை முனிவிகந் துயர்ந்த
- அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் 5
- மனஇருள் இரிய மாண்பொருள் முழுவதும்
- முனிவற அருளிய மூஅறு மொழியுளும்
- குணகடல் குமர் குடகம் வேங்கடம்
- எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
- அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணரத் 10
- தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
- இகலற நூறி யிருநில முழுவதும்
- தனதெனக் கோலித் தன்மத வாரணம்
- திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
- கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் 15
- திருந்திய செங்கோற் சீய கங்கன்
- அருங்கலை விநோதன் அமரா பரணந்
- மொழிந்தன னாக முன்னோர் நூலின்
- வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
- பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் 20
- பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
- என்னு நாமத் திருந்தவத் தோனே