உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/7. வள்ளிப் பாட்டு-2

விக்கிமூலம் இலிருந்து
7. வள்ளிப் பாட்டு-2
ராகம்-கரஹரப்பிரியை தாளம்-ஆதி
பல்லவி

உனையே மையல் கொண்டேன், வள்ளீ!
உவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்! (உனையே)

சரணங்கள்

எனை யாள்வாய், வள்ளீ!வள்ளீ!
இளமயி லே!என் இதயமலர் வாழ்வே!
கனியே!சுவையுறு தேனே!
கலவியி லேஅமு தனையாய்!-(கலவியிலே)
தனியே,ஞான விழியாய்!நிலவினில்
நினைமருவி, வள்ளீ!வள்ளீ!
நீயா கிடவே வந்தேன்.
(உனையே)