உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 கார்ல் மார்க்சின்

தொழிலாளிக்கு என்றே ஒரு தனி சித்தாந்தம்

“சமுதாய வாழ்க்கையிலே தொழிலாளர்களுக்கு என்று தனியான ஒரு தகுதி வேண்டும் என்றார். ஆனால், அவர்கள் விடுதல்ை பெறுவதற்கு முன், தாங்கள் யார்' என்ற தகுதியை முதலில் உண்ர வேண்டும்." என்ற தொழிலாளர்கள் சித்தாந்தத்தை முதன்முதலாக உலகுக்கு எடுத்துக் காட்டி உணர்த்தியவர் இதோ இந்த மார்க்ஸ் என்ற மகத்தான் ஞானிதான்!

மார்க்ஸ் என்றாலே, அவர் ஓர் ஓயாத போராட்டக் காரt என்று மக்களால் மதிக்கப்பட்டவர். மார்க்ஸ்: உற்சாகத்தோடும், உறுதியோடும், உணர்வோடும் ஒன்றை எதிர்த்துப் போராடி, வெற்றி தோல்வி கான்பதே ஆவரது பிறப்பின் அன்பு:

கத்திரிகைத் துறைதான் அவரது உயிர் நாடி ஆவர், எழுத்தின் மீது பகை படையெனத் திரண்டாலும் அதை எதிர்த்து நின்று பகலோன்போல பகையைத் தீய்த்துக் கருக்கிச் சாம்பலாக்குவார்:

அவரைத்தேடி அரசு தடைகள் வரும்: மீறுவார்: அதிகாரிகள் நாடு கடத்துவார்கள்-ஓடுவார்! எல்லை விட்டு எல்லை தேடி ஒடிக்கொண்டே பத்திரிகை சுதந்திர திற்காக உழைப்பார்:

பொருளாதார முடை கடை விரிக்கும்! பொதுமக்கள் இடையிலும், தொழிலாளர் மத்தியிலும் நீதி கேட்பார் மீண்டும் பத்திரிகை நடத்துவா! மீண்டும் நாடு விட்டு நாடு ஓடுவார்.

தன்வர்கள் தய வஞ்சக வலை விரிப்புக் கண்டு நகைப் பார் தொழிலாளர்கள் மீது எதேச்சாதிகார அரசு தொடுக்கும் பொய் வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறி ஏறி இறங்குவார்!