உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 போட்டி உலகில் சான்றிதழ் தேவையானமையின் அவர்கள் தகுதிக்கு ஏற்ற வகுப்பில் அவர்களைத் தேர்வு எழுதச் செய்து வெற்றி பெறின் சான்றிதழ் வழங்கல் பொருத்த மாகும். மத்திய கல்விக் குழுவினர் பத்தாம் வகுப்பு வரை யில் பயிலும் மாணவர் தகுதியும் திறனும் பெற்றிருந்தால், ஓராண்டு முன்பாகவே அத்தேர்வு எழுத அனுமதிக்கப் பெறுவர் என வழி செய்திருப்பது போற்றற்குரியது. இந்த வகையில் இந்திய அரசாங்கம் செயல்படத் துவங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அடுத்த ஆண்டிலேயே, 'Open University system நாட்டில் சில பகுதிகளில் செயல் பட இருப்பதும் வரவேற்கத்தக்கதே. இது பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இது சம்பந்தமான இந்திய அரசாங்கக் கல்வி அதிகாரி திரு. J. P. நாயக் ((Adviser) அவர்களுக்கு இந்த முயற்சியினைப் பாராட்டிக் கடிதம் எழுதியுள்ளேன். Jaffaejo gih (D. O. No. F 10-1/73-Ph.11 dated 31-5-73) கடிதம் வழி என் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாகப் பதில் எழுதியிருந்தார்கள். இவ்வாறு பண்டைக் காலத்தின் வழக்கத்தில் பலவகையில் நாட்டில் பயின்று வந்த கல்வி முறையே இங்குப் புதுப்பிக்கப் பெறுகின்றதாதலின், இதைக் கண்டு மருளவோ, மயக்க முறவோ காரணமில்லை. மாருக அனைவரும் இணைந்து இந்த முயற்சிக்கு ஆக்கம் தேடுவோ மானல் நாடு நல்ல வகையில் முன்னேற வாய்ப்புக்கள் உள்ளன என்பதை அறியல் வேண்டும். கல்வி என்பது யாது? 'கல்வி என்பது யாது? என்ற வினவிற்கு விடை காண்போமாயின் அதில் நாம் இன்று கொள்ள விரும்பும் முறை சிறப்புடைத்து என்பதும் வாழ்வளிக்கும் கல்வி என்பதும் தெளிவாகும். வெறும் ஏட்டுப் படிப்பு, அதிலும் மூலநூலைப் பயிலாது, குறிப்பேடுகளைப் படித்துவிட்டுத்